கறுப்பு யூலை நினைவு நாளில் தாக்குதல் – வீடியோ இணைப்பு

- நடேசன் -

 

யூலை 83 படுகொலையை நினைவு கூர கொழும்பு போரல்ல மயானத்தில் நினைவு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. நினைவு நிகழ்வு நடந்து கொண்டிருந்த பொழுது ஒரு சிலர் திடீரென தலையிட்டு அதை குழப்ப முயன்றுள்ளனர். ஆயிரத்துக்கும் மேலான பொலிசார் அங்கு குவிக்க வைக்கப்பட்டிருந்தும் இவர்கள் நினைவு நாளை குழப்புவதை தடுக்கவில்லை. இதன் பின் நடந்த வாக்குவாதத்தை தொடர்ந்து போலீசார் தலையிட்டு போராடடத்தை நிறுத்த முயன்றதாக தெரிய வருகிறது. இந்த போராடடத்தை வடக்கு – கிழக்கு சொலிடாரிட்டி என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. ஐக்கிய சோஷலிச கடைசி போன்ற அமைப்புக்களை இதற்கு ஆதரவு வழங்கி இருக்கின்றன. அதன் செயலாளர் தள்ளி விழுத்தப்பட்டு காயமைடந்ததாகவும் தெரிய வருகிறது.