இங்கிலாந்தில் ஏப்ரல் 23 ம்திகதி நாடுதழுவிய அவசர எச்சரிக்கை பரிசோதனை
அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து முழுவதிலுமான அவசரகால எச்சரிக்கை சமிக்கை ஏப்ரல் 23 ஞாயிற்றுக்கிழமை சோதிக்கப்பட உள்ளது.பிரித்தானிய நேரம் மாலை 3 மணிக்கு இந்த சோதனை நடத்தப்படவுள்ளது.
இந்த சோதனையின் போது மொபைல் போன்கள் மற்றும் டேப்லெட்களின் முகப்புத் திரைகளில் ஒரு செய்தி தோன்றும், அதனுடன் சுமார் 10 வினாடிகள் நீடிக்கும் சைரன் போன்ற ஒலி அல்லது அதிர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உயிர் ஆபத்தான அவசரநிலைகளில் பொதுமக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு முக்கிய கருவி’ என அமைப்பின் பொறுப்பான அமைச்சர், ஆலிவர் டவுடன் தெரிவித்துள்ளார்.
அவசரகாலத்தில், பொதுமக்களை பாதுகாப்பாக வைத்திருக்க வே இந்த விழிப்பூட்டல் சோதனை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.இது ஒரு சோதனை மட்டுமே மக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தேவையில்லை.
ஃபோன் பயனர்கள் எச்சரிக்கை செய்தியை ஸ்வைப் செய்யலாம் அல்லது தங்கள் மொபைலை வழக்கம் போல் பயன்படுத்த, முகப்புத் திரையில் ‘சரி’ என்பதைக் கிளிக் செய்யலாம். இங்கிலாந்தில் உள்ள அனைத்து 4ஜி மற்றும் 5ஜி ஃபோன் நெட்வொர்க்குகளிலும் பின்வரும் மென்பொருளைக் கொண்ட சாதனங்களிலும் வேலை செய்யும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கடுமையான வெள்ளம், தீ, கடுமையான வானிலை மாற்றங்கள் போன்றவை தொடர்hன உதிர்காலத்தில் நிகழக்கூடிய ஆபத்துகளில் மக்களை விழிப்பூட்டவே இந்த திட்டம் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.