VPLUK 2023 இல் Golden Eagle மற்றும் London Fire அணிகள் வெற்றிக்கிண்ணங்களைத் தட்டிச் சென்றன!

 

Volleyball Premier League – UK – VPL   நடாத்திய   கரப்பந்தாட்டப் போட்டி  நேற்று  ஏப்பிரல் 23ம் திகதி   Southall – Domers wells leisure centre    என்னும் இடத்திலுள்ள இருகோட்டு உள்ளரங்க மைதானத்தில் நடைபெற்றது.

 புலம் பெயர்ந்து பிரித்தானியாவில் வாழும் தமிழ் கரப்பாந்தாட்ட விளையாட்டு வீரர்கள் 12 அணிகளாக  களமிறங்கின. காலை 8.30 க்கு ஆரம்மாகி  ஏறக்குறைய 10 மணித்தியாலங்களாக  நடைபெற்ற இப்போட்டியில்  தமிழ்ப்பாலம், ஒஸ்கார்லீமா, கோல்டன் ஈகிள், யுகே தமிழ யுனைட்டட்,  யுனைட்டட் றைடர்ஸ், மருதம், லண்டன் பயர், இசைத்தமிழ், ரோமியோ நவெம்பர், வொலிபோல் கிங்ஸ், தாய்மண் மற்றும்  இணைந்த கரங்கள் என்னும்   12 அணிகள் போட்டியிட்டன.

 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப்போட்டி மெய்வெளி தொலைக்காடச்சியில் நேரலை செய்யப்பட்டதை பல்லாயிரக்கணக்கான   ரசிகள் பார்வையிட்டுள்ளனர்.

5A Side   போட்டியில்  கோல்டன் ஈகிள் அணி வெற்றிக்கிண்ணத்தை தட்டிச் செல்ல இரண்டாது இடத்தை  ரோமியோ  நவெம்பர்  அணியும், மூன்றாவது இடத்தை ஒஸ்கார் லீமா அணியும் பெற்றக்கொண்டன. இந்தப் போட்டியில் கோல்டன் ஈகிள் அணியைச் சோர்ந்த ஜோஸ்ரன் Man of the match ஆகத் தெரிவு செய்யப்பட்டார்.  மான் ஒப் த சிறிஸ் ஆக ரோமியோ நவெம்பர் அணியைச் சேர்ந்த நிமல் தெரிவு செய்யப்பட்டார்.

4A side போட்டியில் London Fire வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது. இசைத்தமிழ் இரண்டாவது இடத்தையும், ஒஸ்கார் லீமா மூன்றாவது இடத்தையும், பிடித்துக் கொண்டன.  இந்த விளையாட்டில் லண்டன் பயர் அணியைச் சேர்ந்த ஜீவன் Man of the match தகமையைப் பெற்றுக் கொண்டார். மான் ஒப் த சீறிஸ் என்ற தகமையை இசைத்தமிழ் அணியின் விஜி பெற்றுக் கொண்டார்.

பெரும் எழுச்சியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்ற போட்டியில் திறமைமிக்க பல தமிழ் விளையாட்டு வீரர்கள் நடுவர்களாக  கடமையாற்றினார்கள். VPL அமைப்பின் நிறுவுனரும் இயக்குனருமான சிவகுமார் சுரேந்திரன் ஊடக மற்றும் பொது  தொடர்பாளர் சுரேஸ் இணைப்பாளர் குட்டி  ஆலோசகர் வதனன் மற்றும் நிர்வாக அங்கத்தவர் குகன் ஆகியோரின்  பெரும் உழைப்பில் பலரின் ஆதரவோடு போட்டி சிறப்பாக இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.