சூரிய கிரகணம் இன்று.

2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (20) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 மணி வரை நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி நிகழும் என்பதுடன், இது சூரிய கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களுக்குப் பின்னர் ஏற்படவுள்ளது.

மே 5ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம் அதிகாலை 1 மணிக்கு முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இந்த ஆண்டின்  2ஆவது சூரிய கிரகணம் ஒக்டோபர் 14ஆம் திகதி நிகழும் அதேவேளை, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் புலப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  ஆண்டின் 4ஆவதும் கடைசியுமான சந்திர கிரகணம் ஒக்டோபர் 29ஆம் அதிகாலை 1.06 மணிக்கு ஆரம்பமாகி 2.22 மணிக்கு முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">