சர்வதேச நாணயநிதியத்தின் அறிவிப்பு- சம்பிக்க எச்சரிக்கை!

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையில் கூறப்பட்டதை போன்று இலங்கை செயற்படும் போது மிகவும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும் என்பதை அனைவரும் நினைவில் கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பிலுள்ள 43வது பிரிவு தலைமை அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் பிரேரணை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளுர் கடனை மறுசீரமைக்கப் போவதில்லை என அரசாங்கம் கூறினாலும், இலங்கை முன்வைத்த கடன் முன்மொழிவுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரத்துடன் இன்றைதினம் அரசாங்கம் கடனை மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.

இது உண்மையில் நாம் ஒரு பெரிய பிரச்சனையை எதிர்கொள்ளும் ஒரு சவால் என்று நான் நினைக்கிறேன். அந்த சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். அதனால்தான் இந்தக் கடன் பெறுவது இங்கு பிரச்சினை இல்லை.

ஆனால், நாணயநிதியின் தீர்மானம் காரணமாக உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் எமது அபிவிருத்தி நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க முன்வரலாம். அது ஒரு நல்ல அறிகுறி எனவும் தெரிவித்தார்.