நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திறந்த வெளி பெட்மிடன் ஆரம்ப வைபவம்.

செ.திவாகரன்

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் திறந்தவெளி பெட்மிடன் விளையாட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கை பெட்மிடன் சம்மேளனம் அகில இலங்கையில் புதிதாக அறிமுகபடுத்தி வரும் ( Air Badminton) திறந்த வெளி பெட்மிடன் விளையாட்டை நுவரெலியா பெட்மிடன் (பூப்பந்தாட்டம்) சங்கத்தினரும் மத்திய மாகாண பெட்மிடன் சங்கத்தினரும் இணைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் திறந்தவெளி பெட்மிடன் விளையாட்டை இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பித்து வைத்ததனர்.

இவ் வைபவத்தில் மத்திய மாகாண பெட்மிடன் சங்கத்தினதும் நுவரெலியா பெட்மிடன் சங்கத்தினதும் தலைவரும் முன்னாள் நுவரெலியா மாநகர முதல்வருமான மஹிந்த தொடம்பேகமகே,இலங்கை பெட்மிடன் சம்மேளனத்தின் உப தலைவர்களான பாலித்த ஹெட்டியாராச்சி, ரோசான் குணவர்தன, அகில இலங்கை திரந்த பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கங்களின் தலைவரும் நுவரெலியா விளையாட்டுக் கழகத்தின் தலைவருமான அருணசாந்த ஹெட்டியாராச்சி, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் மகேந்திர செனவிரட்ன, முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் எம். மோமட் பளீல் , வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவர் பி. மகேஷ்வரன் உட்பட கழகங்களின் உறுப்பினர்களும் வைத்தியர்களும் கலந்துக் கொண்டனர்.