உள்ளுராட்சித்தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் கூட்டணியும் மணிவண்ணன் அணியும் இணைந்து போட்டியிட தீர்மானம்.

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு  இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 6 மணிக்கு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா.குகதாஸ், யாழ் மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியும், யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் வி.மணிவண்ணன் தலைமையிலான அணியும் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன. யாழ்ப்பாணம் கோயில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இன்று மாலை இரு தரப்புக்கும் இடையே முக்கிய கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பின் பின்னர் ஊடங்களுக்குக் கருத்துத் தொிவித்த சி.வி.விக்னேஸ்வரன், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் யாழ். மேயர் வி.மணிவண்ணனும் கலந்துகொண்டார்.