ரஷ்யாவின் எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் புதிய திட்டம்.

ரஷ்யாவின் எல்லைகளில் பாதுகாப்பை வலுப்படுத்த ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்  கூடுதல் படைவீரர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார்.உக்ரேனின் சில பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்குள்ள குடியிருப்பாளர்களைப் பாதுகாக்க, சிறப்புச் சேவைப் பிரிவுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

பெலரூஸ் உள்ளிட்ட எந்த நாட்டையும் கட்டுப்படுத்தும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்று பெலரூஸ் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் லுக்கஷென்கோ கூறியுள்ளார்.இருநாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.புட்டின் தம்முடைய மூத்த சகோதரர் போல என்று பெலரூஸ் தலைவர் குறிப்பிட்டார். ரஷ்யா இல்லாமல் பெலரூஸ் அதன் விவகாரங்களைச் சொந்தமாகக் கையாள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவும் பெலரூஸும் இணைந்து ராணுவப் பயிற்சியைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளன.இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் ஆயுதப் பரிமாற்றம் பாதுகாப்புக்காக எடுக்கப்படும் இணைந்த நடவடிக்கை என்று அவை தெரிவித்தன.பெலரூஸ் ஆகாயப்படை வீரர்களுக்கு ரஷ்யா தொடர்ந்து பயிற்சிகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.அணுவாயுதங்களை ஏந்திச் செல்லும் விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சியும் அதில் அடங்கும்.