சொந்த மக்களுக்கு ஏமாற்றி துரோகம் செய்யும் தமிழ் தலைமைகள்: பகிரங்கமாக மேடைக்குவர தயார்: வீ. ஆனந்தசங்கரி அறிக்கை.

வடக்கு, கிழக்கின் தமிழர் பகுதியில், இந்து ஆலயங்கள் இடிப்பு காணிகள் அபகரிப்புக்களை நிறுத்தினால் தான் அரசாங்கத்துடன் பேச்சுக்கு வருவோம் என்று சொல்ல தைரியம் இல்லாத தமிழ் தலைமைகள், 70 வருடகாலமாக  தீர்க்க முடியாத அரசியல் பிரச்சனையை ஒன்றரை மாதத்தில் ஜனாதிபதி தீர்ப்பார் என நம்பிப் சென்று தமிழ் மக்களை மடையர்கள் ஆக்குகின்றனரா?’ என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி  கேள்வி எழுப்பியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை, தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகத்தால்  வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் சர்வகட்சி மாநாட்டை கூட்டிய ஜனாதிபதி, கட்சி தலைவர்கள் இல்லாதவர்களை அழைத்துள்ள போதும் என்னை அழைக்கவில்லை என்றுமு;, கடந்த 2005ஆம் ஆண்டு ரணில் சமஷ்டியை தீர்வாக வைத்து ஜனாதிபதி தேர்தலில்  போட்டியிட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான 22 எம்.பிக்கள் தேர்தலை பகிஷ்கரியுங்கள் என பிரச்சாரம் செய்து ரணிலின் சமஷ்டியை தோக்கடித்து மஹிந்தவின் ஓற்றையாட்சியை வெல்லவைத்து ஒற்றையாட்சியை நிலைநிறுத்தி  தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தனர் என்றும் அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அன்று சமஷ்டி வேண்டாம் என பிரச்சாரம் செய்த இரா. சம்பந்தன் மற்றும் தமிழ் தலைமைகள், தற்போது வடக்கு, கிழக்கில் இந்து ஆலயங்கள் இடிப்பு காணிஅபகரிப்பில் ஜனாதிபதி செயற்பட்டுக் கொண்டு தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வுக்கு பேச்சுக்குவருமாறு அழைக்கின்றபோது, முதலில் தமிழர்களின் காணி அபகரிப்பு இந்து ஆலயங்கள் உடைப்பை நிறுத்தினால் தான் பேச்சுக்கு  நாங்கள் வருவோம் என சொல்ல தைரியம் இல்லாதவர்கள் என குற்றம் சாட்டப்ட்டுள்ளது.2009ஆம் இறுதி யுத்தத்தின் போது 3 இலட்சம் மக்கள் இறக்கும் போது  மௌனிகளாக இருந்துவிட்டு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, இன்று அரசாங்கத்துடன் வெக்கமில்லாமல் சமஷ்டியை பற்றி பேசப்போகிறனர் என்பது வேடிக்கையானது என்பதுடன் இப்படியான சூழ்நிலையில் இனி சமஷ்டி கிடைக்குமா? மக்களை ஏமாற்றினால் போதும் எனது அரசியல் செய்கின்றனர் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இந்த தலைவர்களின் ஊழலை பற்றி அமம்பலபடுத்தாது விடுவதால் மக்கள் அவர்களுக்கு வாக்களிக்கின்றனர். இரா.சம்மந்தன் பாராளுமன்றபடி எற தகுதியில்லாதவர். ஏன் என்றால் சட்டப்படி உருவாக்கப்பட்ட பாராளுமன்றம் அல்ல. பேச்சு வார்த்தைக்கு மத்தியஸ்துவம் செய்ய 3 வெளிநாடுகளை  கூப்பிட்ட வேண்டும் என அறிக்கை விட்ட  அடி முட்டாள்கள். எங்கள் மக்களை ஏமாற்றாதீர்கள் செய்தது போதும். எந்த நாடும், இதை செய் என்று சொல்லமுடியாது என்பது சட்டத்தரணிகளான உங்களுக்கு தெரியாதா? ஏன் மக்களை ஏமாற்றுகிறீர்கள்.

இந்தியாவில் இருந்து கப்பலில் பொருட்கள் வந்ததும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று அங்கு அருகில் நிற்கின்றனர்.என்னவென்றால் நாங்கள் சொல்லிதான் இந்தியா பொருட்களுடன் வந்தது என சுரேஷ் பிரேமச்சந்திரன் உட்பட தமிழ் தலைமைகள் தமது வரலாற்றை பின்னோக்கி பார்க்கவேண்டும்.அப்போது தான் தாங்கள் சொந்த மக்களுக்கு எவ்வளவு தூரம் ஏமாற்றி  துரோகம் செய்துள்ளது என தெரியும்.  இல்லை என்று ஒருவர் சொல்லட்டும்  நான் பகிரங்கமாக மேடைக்குவர தயார்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.