ரணிலின் அழைப்பு தொடர்பாக தமிரசுக்கட்சியின் நிலைப்பாடு.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு  நேற்று   வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய மத்திய குழுவில் தற்கால அரசியல் சூழலில் தமிழ் கட்சிகளின் வகிபாகம், ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள தமிழ் கட்சிகளின் சந்திப்பு உட்பட கட்சி விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு இன்று வவுனியாவில் வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடி, தற்கால அரசியல் சூழலில் தமிழ் கட்சிகளின் வகிபாகம், அதிபருடன் இடம்பெறவுள்ள தமிழ் கட்சிகளின் சந்திப்பு உட்பட கட்சி விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.

அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தமிழ் தேசிய கட்சிகளோடு பேசி, அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும் என்ற விடயம் பற்றியும்,தற்போது அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது பற்றியும், வடக்கு கிழக்கில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு முறையில் சமஸ்டி கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற 3 விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்வதென தீர்மானித்து அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.