2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு 43 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று பாராளுமன்றத்தில்  இடம்பெற்றது. ஜனாதிபதி, பிரதமர் அலுவலகம், உயர் நீதிமன்ற நீதியரசர்கள், சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று விவாதம் நடத்தினர்.

வாக்கெடுப்பில் ஆதரவாக 123 வாக்குகளும், எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்போது, 2 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி. விக்னேஷ்வரன் மற்றும் வேலுகுமார் ஆகியோரே வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருக்கவில்லை. முன்னதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால், கடந்த நவம்பர் 14ஆம் திகதி சபையில் முன்வைக்கப்பட்ட பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 7 நாட்கள் இடம்பெற்று, கடந்த 22 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பின்னர் இன்று மாலை   இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றில் நடைபெற்று நிiவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.