என்ர  கையில மட்டும் ஒரு கமறா இருந்திருந்தால் படம் பிடித்து காட்டியிருப்பேன் பாருங்காே?

- முத்தமிழன் -

சரி ..இன்றைக்கும் வந்திருக்கிறேன் ஏதும் நல்ல விஷயத்தை சொல்லித்தானே ஆக வேண்டும். சொல்லாட்டிலும் நீங்களும் குறை நினைப்பியள்  சரி… சரி என்ன விஷயத்தை சொல்லுவோம் சரி… சரி என்ன என்றால் பாருங்காே?

அடீக்… அடீக்.. என்னடா இது பூராயக் கிழவன் நாயை துரத்துறார் என்று நினைப்பீங்கள் அதை ஏன் பேசுவான் இப்போது பத்து நாளுக்கு முன்னுக்கு முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட இடத்திலே ஒரு வங்கிக்கு காசு எடுப்பமண்டு போனன் அட கடவுளே சீச்சீ என்னாலே இயலாம போச்சு நீண்ட வரிசை நான் மட்டுமே என்ன போல நூற்றுக்கணக்காண ஆட்கள் பாருங்கோ ?அதுக்க என்ன போல கிளடு கட்டைகளும் கடவுளே! கால் நடக்க மாட்டாமலும் நிண்டு திண்டாடுதுகள். ஆனால் பாருங்கோ? சொல்லுறன் எண்டு குறை நினைச்சு போடாதேங்கோ!

ஒரு ஆளுக்கு காசு கொடுக்க எவ்வளவு நேரம்…செல்லுது.காலம ஆறு மணிக்கு சாப்பாடு தண்ணி இல்லாமல் போன சனங்கள் பின்னேரம் மட்டும் நிக்கிறது என்றால் இயலுமே! என்ன செய்றது  ஏழை எழியதா பிறந்தால் இப்படித்தான் சரி அரசாங்கம் இந்த காசண்டாலும் தருகுதே எண்டு சந்தோஷப்பட்டால்… அத ஏன் பேசுவான் ஏதோ தங்கடகாச தாற மாதிரி சில பேற்றை நினைப்பு.. ஓ!.. அப்படி சில பேற்றை நினைப்பு பாருங்காே? சில பேர் என்றால் அந்த வங்கில பணியாற்றின உத்தியோகத்தர்கள் தான் அனேகமாக சூடாத்தான் நிண்டுச்சினம்..

கிழவன் கிழவிய கூட மதிக்கல்லை சில வீடுகளிலே போகைக்குள்ள கடி நாய்கள் குலைக்கும் அது மாதிரித்தான் எரிஞ்சு விழுந்து கொண்டு நின்டிச்சினம் ..அடிக் ..அடிக் .. இப்ப நினைக்கவே எனக்கு திகைப்பா இருக்குது பாருங்கோ?அங்கால தள்ளு இஞ்சால  தள்ளு ஒரு நாய் மாதிரி தான் எல்லாறும் நின்டிச்சினம்  உண்மையாய் உங்களுக்கு ஏன் இந்த மனம் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தானே குடுக்குது சும்மா தர்ம வேலை செய்யல தானே நான் பொய் சொல்லல பாருங்காே என்ர  கையில மட்டும் ஒரு கமறா இருந்திருந்தால் படம் பிடித்து காட்டியிருப்பேன் பாருங்காே?அதுதான் என்ர கவலை பாருங்காே?உத்தியோகம் தந்தால் யோக்கியமாய் செய்யுங்கள் அயோக்கியமா நடக்காதீர்கள். பூராயம் பிடிக்கிறது என்ர வேலை இல்ல பாருங்காே?

தீமையைக்கண்டால் என்னால பொறுக்க இயலாது அதுதான் பாருங்காே?தயவுசெய்து உத்தியோகத்தரே  மற்றவேன்ர வயிற்றெரிச்சல சம்பாதிக்காதேங்கோ? அன்பா நடத்துங்க உங்கள விட மற்ற மனுசரை உயர்வா மதியுங்கோ? நீங்க உயரும்போது பணிவு உங்களுக்கு வரவேணும் உங்களுக்கு அரசாங்கம் வேலை தந்திருக்கிறது ஆனா வேலை வெட்டி இல்லாத ஏழைகள்தான் உங்களிட்ட கையேந்துங்கள் வந்து காசுக்கு மறந்து போவாதேங்கோ?… வங்கியின்  பெயர் சொல்லாமல் பொதுவா சொல்லியிருக்கிறன்  ஏனென்டால்  எனக்கு பெரிய மனசு பாருங்கோ?

சிந்தியுங்காே செயல்படுங்கோ கடமையை சரியா செய்யுங்கோ ஏழை எளியவைகளே வயசு போனதுகள பொது ஜனங்கள திண்டாட வைக்காதேங்காே உங்கட வீட்டு கோபங்களை அலுவலகத்தில் வந்து கொட்டி தீர்க்காதீங்க இதுதான் இன்றைக்கு விஷயம் இப்ப வங்கி என்ற பெயரைச் சொல்லாமல் நான் பொதுவா இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறேன் குறிப்பிடக் கூடாது என்று தான் நினைக்கிறன் நல்லது நடந்தால் இந்த பூராயக்கிழவனுக்கு சந்தோசம் அப்ப நான் வரப்போறேன் அடுத்த வாரம் சந்திப்போம்.பாய்….பாய்..