விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: இரா.சம்பந்தன் கோரிக்கை.

விரைவில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.இந்தியாவின் த ஃப்ரொன்ட்லைன் சஞ்சிகைக்கு வழங்கிய விசேட செவ்வியில்  அவர் இதனைக் கூறியுள்ளார்.

தவறாக நாட்டை நிர்வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ போராட்டத்தின் விளைவாக பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்ட போது, துரதிர்ஷ்டவசமாக ரணில் விக்ரமசிங்க தனிப்பட்ட காரணங்களுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு அரசாங்கம் உள்ளதா?, அந்த அரசாங்கம் என்ன? யார் எவருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றார்? பொருளாதாரம் தொடர்பிலான அவர்களின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்விகள் எழுவதாகவும் அவர் கூறியுள்ளார்.தற்போதைய நிலையில், பொதுத் தேர்தல் கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் எனவும் இதன்மூலம் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.