மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு.

டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என்ற அறிவிப்புக்கு எம்.பி சு.வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

டெல்லி பல்கலை கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக ஏற்று கற்க வேண்டும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது குறித்து, இன்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.மேலும், 130 கோடி மக்களும் தமிழை காப்பாற்ற வேண்டியது கடமை என பிரதமர் மோடி கூறியிருந்தார். ஆனால் அதே நேரம் மத்திய அரசு நடத்திவரும் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிக்கும் மாணவர்கள் இந்தி மொழியை ஒரு பாடமாக கட்டாயமாக தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும் என கூறுகிறார்கள்.

டெல்லி பல்கலை கழகம் என்பது மாநில அரசு நடத்தும் பல்கலைக்கழகம் அல்ல. அது மத்திய அரசு நடத்தும் பல்கலைக்கழகம். அங்கு இந்தியா முழுவதும் இருந்து, இந்தி தெரியாத மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் படிக்கிறார்கள். இப்படி இருக்க, மத்திய அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. மத்திய அரசு இந்தி திணிப்பபை மட்டுமே செய்து வருகிறது. திருக்குறள், புறநானூறு என வாய்பந்தல் செயல் தான் இங்கு நடக்கிறது. என தனது கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.