பெலாரஸ் எல்லைக்கு அருகே மிகவும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட 8 இலங்கை ஏதிலிகள் : ஆளில்லா விமானம் மூலம் கண்டுபிடிப்பு
- வீடியோ இணைப்பு -
பெலாரஸ் எல்லைக்கு அருகே சதுப்பு வெள்ளத்தில் இருந்து ஏதிலிகள் என சந்தேகிக்கப்படும் 10 பேரை போலந்து பொலிசார் மீட்டுள்ளனர்.
நவம்பர் 8ந்திகதி பெலாரஸ் நாட்டின் எல்லைக்கு அருகிலுள்ள சதுப்பு நிலத்திலிருந்து புலம்பெயர்ந்ததாக சந்தேகிக்கப்படும் 10 பேரை மீட்டுள்ளதாக போலந்தின் எல்லைப் பொலிஸ் படை தெரிவித்துள்ளது. இதில் எட்டு இலங்கை பிரஜைகள், ஒரு பாகிஸ்தான் பிரஜை மற்றும் ஒரு இந்திய பிரஜை ஆகியோரைக் காப்பாற்றியதாக தெரிவித்துள்ளது. பெலாரஷ்ய எல்லையில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சீமியானோவ்கா ஏரிக்கு அருகில் செவ்வாய்க்கிழமை மாலை இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டர்கள்.
ஆளில்லா விமானத்தைப் பயன்படுத்தியே இவர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று பொலிசார் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் காணப்பட்ட அவர்களை மீட்க ஒரு இராணுவ ஹெலிகாப்டர் நடவடிக்கைக்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. உக்ரைன் போருக்கு மத்தியிலும் பெலாரஸ் எல்லையில் ஏதிலிகளை கொண்டுவரும் நடவடிக்கை அதிகரித்துள்ளதாக போலந்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கடந்த ஆண்டில் பெலாரஸ் மற்றும் போலந்து இடையே உறைபனி நிலையில் குறைந்தது 20 பேர் இறந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.