மெய்வெளி அபிமானியர் அனைவருக்கும் வணக்கம் பாருங்கோ?

- முத்தமிழன் -

மெய்வெளி அபிமானியர் அனைவருக்கும் வணக்கம் பாருங்கோ?

நான்தான் உங்கட பூராயக்கிழவன் ..

ஓ பூராயக்கிழவன் பூராயக்கிழவன் எண்டு சொல்ல நீங்கள் என்னை பூராயம் புடுங்கிற ஆள் எண்டு நினைக்கிறது …. ம் …எனக்கு விளங்குது..நான் அப்பிடி பூராயம் பிடுங்கிற ஆள் இல்லை.

எனக்கு அறிஞ்சத, தெரிஞ்சத ,பாத்தத,புரிஞ்சத உங்களுக்கு சொல்ல ஆசைப்படுகிறேன்.
அதுதான்   வேற ஒண்டும் இல்லை.. நான் சொல்லுறதில ஏதும்  பிழை இருந்தால்  உடனே மறந்திரடுங்கோ? நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கோ? இதுதான் உங்கட பூராயக்கிழவன்ரை வேண்டுகோள்….

பல இடங்களில் சுற்றித்திரிஞ்ச நான் இனி வாரா வாரம் “மெய்வெளி”இணயத்திலையும் வந்திருக்கிறன் எனக்காக காத்திருங்கோ …….ம் …ம்..சரி சரி வந்திட்டன் இன்டைக்கு என்னத்த சொல்லுவம்..ம்…

அண்டைக்கு பாருங்கோ முல்லைத்தீவில் இருந்து வவுனியாவுக்கு ஒரு அலுவலா பஸ்சில பயணம் போனன் . அதையேன் பேசுவான் ஏறினதில இருந்து இறங்கின வரைக்கும் மந்தி தொங்கின மாதிரி தொங்கிக்கொண்டு போய்ச்சேர்ந்தன்….கடவுளே நான் ஒரு வயசு போனமனுசன் நான் மட்டுமே பஸ்சில நிண்டதுகள் எல்லாம் என்னைப்போல கிளடுகள்..சீற்றில இருந்ததுகள் எல்லாம் சின்னஞ்சிறுசுகள் …ம்…முந்தி எண்டால் எங்கட காலத்தில வயசு போன மனிசரைக் கண்டால் நாங்க உடனே எழும்பி வயசு போனவைக்கு இடம் கொடுப்பம் இப்ப அப்பிடி இல்ல காலம் தல கீழா மாறிப்போச்சு…

பஸ்சில இருந்த இளசுகளை நான் கவனிச்சு பார்த்தன் ஒருத்தரும் தலை நிமிர்ந்து பார்க்கல …ஏன் தெரியுமே அப்படி   மடியில பாண் அளவில பெரிய பெரிய போணுகளை வைச்சக்கொண்டு  காதுக்குள்ள கோணையும் செருகிக்கொண்டு அவே தங்கட பாடு !பக்கத்தில என்ன நடக்குது……நன்மை தீமை தெரியேல்லை பாருங்கோ ! அவேக்கு …..ம்…சரி  எங்களைதான் மதிக்கேல ..அட கடவுளே பிள்ளைத்தாச்சிப் பொமபிளைக்கும் இடங்கொடுக்கல .பிறகு கன்றைக்ரர் பேசித்தான்  ஒரு சீற்றுக் கிடைச்சுது பாருங்கோ!…ம்

அதுக்குள்ள இன்னுமொரு சங்கதியை சொல்ல வேணும்…சீற்றில இடங்காணாதெண்டு இரண்டு பேருக்குள்ள சண்டையும் வந்திட்டுது .. ஏதோ பஸ்ச விட்டு இறங்கேக்க சீற்றையும் கொண்டு போறமாதிரி நினைப்பு ..ம்..ம்…இப்படி பஸ்சுக்குள்ள பல அலுவல்கள் ..பேந்து பாருங்கோ மாங்குளத்தில இறங்கவேண்டிய ஒரு பெடி போனுக்கை நோண்டிக்கொண்டிருந்து இடத்தையும் விட்டிட்டு கடைசியா வவுனியால வந்து தடுமாறிக்கொண்டு நிண்டுது. ம்..நானும் என்ன செய்ய முல்லைத்தீவில கமலஹாசன் மாதிரி ஏறினன் கடைசியா வவுனியாவில இறங்கேக்க கருகின காகக்குஞ்சு மாதிரி அல்லே இறங்கினான்.

சரி சரி இப்பிடி பல விசயங்கள் இனிப்பா இருக்கு அடுத்தமுறை சந்திப்பம் ..பாய்…..பாய்….