தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றார் செல்வன் ஆன்சன் நெரியோ அபினாஷ்.

கல்வி அமைச்சின் தமிழ் மொழி அலகினால் 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ் மொழித் தேசிய மட்ட போட்டிகளில் பங்குபற்றி தனி நடிப்பு போட்டியில் நான்காம் பிரிவில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார் வடமாகாணம் யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலையில் கல்வி பயிலும் தாளையடியை சேர்ந்த செல்வன் ஆன்சன் நெரியோ அபினாஷ்.

குறித்த மாணவனை ஆசிரியர் திரு செல்வமோகன் அவர்கள் வழிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது. இவருடைய வெற்றிக்கு முன்னின்று உழைத்த யா/செம்பியன்பற்று அ.த.க பாடசாலை அதிபர் ,ஆசிரியர் திரு செல்வமோகன் பாடசாலை சமூகத்திற்கும் , பெற்றோருக்கும் மெய்வெளி ஊடகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.