ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் எச்சரிக்கை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் தினேஸ் குணவர்தன மகிந்த முன்னிலையில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஒன்றாக எழுவோம் – களுத்துறையில் இருந்து ஆரம்பிப்போம்’ என்ற தொனிப்பொருளில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டம் நேற்று மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவின் களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலக வளாகத்தில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் தினேஸ் குணவர்தன, மொட்டுவின் அதிகாரத்துடனேயே அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆட்சி நடத்துகின்றார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

அத்துடன் தற்போதைய அதிபருக்கு நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு எம்.பி மட்டுமே இருப்பதாகவும், ஒரு எம்.பியை வைத்து ஆட்சி செய்ய முடியாது எனவும் தினேஷ் குணவர்தன தனது உரையில் தெரிவித்தார்.