வெளிநாட்டு கஞ்சா செடி வளர்த்தவர் நுவரெலியாவில் கைது !

டி.சந்ரு செ.திவாகரன்

நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிளக்பூல் ரூவான்எலிய பகுதியில் கஞ்சா செடி வளர்த்து வந்த ஒருவரை விசேட அதிரடி படையினர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் கைது செய்துள்ளனர்.

நுவரெலியா பிளக்பூல் ரூவான்எலிய பகுதியில் அமைந்துள்ள தனிவீடொன்றில், யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில், பூச்செடி வளர்க்கும் சட்டியில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நிலையில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நுவரெலியா பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையிலேயே வெளிநாட்டு கஞ்சா செடிகள் வளர்ப்பில் ஈடுபட்ட 27 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து ஒரு அடி தொடக்கம் மூன்று அடி உயரமான கஞ்சா செடிகள் 70 தொடக்கம் 77 கஞ்சா செடிகளும் மீட்டுள்ளனர்

இதேவேளை, சந்தேக நபர் கஞ்சா செடிகள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்டது எனவும் , வீட்டில் மூன்று அறைகளில் வளர்த்து வந்ததாகவும் ஒப்புக்கொண்டார் என பொலிஸார் தெரிவித்தனர்

இதனை தொடர்ந்து நுவரெலியா பிளக்பூல் பகுதியில் மேலும் சில இடங்களில் கஞ்சா செடி வளர்க்கப்படுகிறதா ? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்