பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

105

அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை மதுரையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் மாணவர்கள் நலன் கருதி 5ம் வகுப்பு வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி மதுரை ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் குழந்தைகளுக்கு ஊட்டி துவக்கி வைத்தார்.