மறைந்த ராணியார் இரண்டாம் எலிஸபெத் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு இல்லை.

மறைந்த பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிஸபெத் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளும்படி, கிட்டத்தட்ட 500 வரையான உலகத் தலைவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ள அதேவேளை ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு அனுப்படவில்லை என கூறப்படுகின்றது.

வரும் திங்களன்று ராணியாரின் இறுதிச்சடங்கு இடம்பெறவுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல அரச குடும்பத்தவர்கள் கலந்துகொள்கிறார்கள். பெல்ஜிய அரசர் பிலிப் மற்றும் அரசியார்  ஸ்பெயின் நாட்டு அரசர்  மற்றும் அரசியார் ஆகியோருடன் நோர்வே, டென்மார்க், சுவீடன் போன்ற நாடுகளின் அரசர்களும் அரசியார்களும் கலந்துகொள்கிறார்கள்.

பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், கனேடிய பிரதமர் யஸ்ரின் மூடோ போன்றோரும் கலந்துகொள்கிறார்கள். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொள்ளும் அதேவேளை, இந்தியப் பிரதமர் மோடி கலந்துகொள்வாரா? இல்லையா? என்பது இதுவரை அறிவிக்கப்படவில்லை. வரவிருக்கும் உலகத் தலைவர்கள் யாவரும் மேற்கு லண்டனில் உள்ள ‘பெயர் குறிப்பிடப்படாத’ ஓரிடத்தில் இருந்து பேருந்துக்கள் மூலம் வெஸ்மஜனஜஸ்ரர் அபேக்கு  அழைத்துவரப்படவுள்ளார்கள்.

மேலும் லட்சக்கணக்கான பொதுமக்கள்  வெஸ்மஜனஜஸ்ரர் அபேக்கு அருகில் வந்து குவியப்போகிறார்கள். இந்நிலையில் வரலாற்றில் முக்கிய நிகழ்வாக, மாட்சிமை தாங்கிய ராணியாரின் இறுதிச் சடங்கு அமையப்போகிறது.