• Tuesday, March 3, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

கைதுகளின் பின்னணியில் மொட்டுக் கட்சி, ஜோசப் ஸ்டாலின் குற்றச்சாட்டு

- வீடியோ இணைப்பு -

By Admin Last updated Sep 7, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

இலங்கையில் கடந்த ஜுலை மாத ஆரம்பத்தில் இடம்பெற்ற வன்முறைகளின் போது அரசியல்வாதிகளின் வீடுகள் சேதமாக்கப்பட்ட விடயத்துடன் தொடர்புடைய கைதுகளின்போது பொலிஸார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பரிந்துரைகளுக்கு அமைய செயற்படுவதாக தென்னிலங்கையின் சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சியின் அரசியல்வாதிகள் வழங்கும் பெயர்ப்பட்டியல்களுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், அதற்கு ஆதாரமாக 2021ஆம் ஆண்டு நியமனம் பெற்ற 182 பொலிஸ் பொறுப்பதிகாரிகளை பரிந்துரை செய்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளே எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுக்குத் தெரியும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைகத்தமை தொடர்பில் இன்று கைதுகள் இடம்பெறுகின்றன. இந்த கைதுகள் மொட்டுக் கட்சியின் முன்னாள், இன்னாள் பிரதேச சபை, மாகாண சபை உறுப்பினர்கள் வழங்கும் பெயர் பட்டியலுக்கு அமையவே இடம்பெறுகின்றது. இது மிகவும் பாரதூரமான விடயம். 2021ஆம் ஆண்டு பொலிஸுக்கு 184 பேர் பொலிஸ் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். அவர்களில் 182 பேர் மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஊடாக அறிவித்திருந்தார்.  ஆகவே சில பொலிஸ் நிலையங்களில் மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமைய நியமிக்கப்பட்டவர்களே பணியாற்றுகின்றனர். ஆகவே மொட்டுக் கட்சியின் பரிந்துரைக்கு அமையவே கைதுகள் இடம்பெறுகின்றன. ஆகவே கைதுக்கான சாட்சியாக மொட்டுக் கட்சியின் பெயர்ப் பட்டியலே காணப்படுகின்றது. இது மிகவும் பாரதூரமான அடக்குமுறை இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. என்றார்.

இலங்கை அரசாங்கத்தின் இந்த தொடர் அடக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அடக்குமுறைக்கு எதிரான தமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Catchup shows
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">

Prev Post

அமைதி ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை புகுத்திய முன்னிலை சோஷலிசக் கட்சி, ஜனாதிபதி குற்றச்சாட்டு

Next Post

நாடாளுமன்றத்தில் அனைவரும் கொள்ளையர்கள், வீட்டுக்கு அனுப்புவோம்’ அருட்தந்தை சத்திவேல்

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

கொலன்னாவை எரிபொருள் முனையத்தின் தற்போதைய விநியோக நிலைமை…

Mar 2, 2026

வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய…

Mar 2, 2026

மாகாணப் பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நிதி…

Mar 2, 2026

எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பரவும் வதந்திகளை நம்ப…

Mar 1, 2026

கொழும்பில் பல பகுதிகளில் எரிபொருளுக்காக நீண்ட வரிசைகள்:…

Mar 1, 2026

கொழும்பில் தேசிய ரீதியில் சிறந்த நூல்களுக்கான பரிசளிப்பும்…

Mar 1, 2026

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா கோலாகலமாக…

Feb 27, 2026

இளம் தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி மற்றும் இந்தியப்…

Feb 27, 2026

நிலக்கரி இறக்குமதியில் பாரிய மோசடி: மின்சார சபைக்கு பல…

Feb 27, 2026

பொடி லெசி கைதுசெய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து…

Feb 27, 2026
Prev Next 1 of 71
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.