• Sunday, September 20, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

பிரித்தானிய பிரதமர் தேர்வில் இம்முறை பல புதுமைகள் நிகழ இருக்கின்றன

By Admin Last updated Sep 1, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

பிரதமரின் பதவியேற்பு விழா இம்முறை பக்கிங்காம் அரண்மனையில் அல்ல. பொதுவாக, புதிதாக பிரதமராக பொறுப்பேற்பவர் பக்கிங்காம் அரண்மனைக்குச் சென்று பிரித்தானிய மகாராணியாரை சந்திப்பார்.

மகாராணியார் புதிய பிரதமரின் கைகளை முத்தமிடுவார். பதிலுக்கு, பிரதமர் மகாராணியாரின் கைகளை முத்தமிடுவார். இது ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்துவரும் பிரித்தானிய மரபு. ஆனால், இம்முறை மகாராணியாருக்கு பயணம் செய்வதில் பிரச்சினைகள் உள்ளதால், அவரை பயணத்தை தவிர்க்குமாறு அவருக்கு நெருக்கமானவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள்.

ஆகவே, தற்போது ஸ்காட்லாந்திலுள்ள பால்மோரல் மாளிகையில் தங்கியிருக்கும் அவர் பக்கிங்காம் மாளிகைக்குச் செல்வதற்கு பதிலாக, புதிதாக பதவியேற்கும் பிரதமர், பால்மோரல் மாளிகைக்கு விமானத்தில் பறந்து வந்து மகாராணியாரை சந்திக்க இருக்கிறார்.

Catchup shows

அத்துடன் இம்முறை புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொள்பவர், தனது பணியை, அது முதல் கடிதமாக இருக்கட்டும், அல்லது முதல் கையெழுத்தாக இருக்கட்டும், நடுவானில், அதாவது பால்மோரல் மாளிகையிலிருந்து லண்டனுக்குத் திரும்பும் வழியில், விமானத்தில்தான் துவக்க இருக்கிறார்.இதற்கிடையில், தனது ராஜினாமாவை வழங்குவதற்காக அரசு விமானத்தில் பால்மோரல் மாளிகைக்குச் செல்லும் போரிஸ் ஜான்சன், அதற்குப் பிறகு அவர் பிரதமர் இல்லை என்பதால், அவர் அரசு விமானத்தில் வரமுடியாது.

அவர்தான் அதற்குப் பின் தனது சொந்த பயண ஏற்பாடுகளை செய்துகொள்ளவேண்டும்.இந்நிலையில், புதிதாக பிரதமராக பொறுப்பேற்பவர், அது லிஸ் ட்ரஸ்ஸானாலும் சரி, ரிஷி சுனக்கானாலும் சரி, திங்கட்கிழமை மாலை 4.00 மணிக்கு பிரதமர் இல்லத்தில் உரையாற்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prev Post

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் பாஜகவினரை அரசு ஒடுக்க வேண்டும்:ஆளூர் ஷா நவாஸ் ட்வீட்

Next Post

ரஸ்ய இராணுவ பலத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது: ஜேர்மனியின் பாதுகாப்புத் தலைவர் எச்சரிக்கை

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு, தற்போது மரண தண்டனை…

Sep 18, 2026

ஜேர்மன் பாராளுமன்றப் பிரதிநிதிகள் குழு பிரதமர் கலாநிதி ஹரிணி…

Sep 17, 2026

புதிய அரசியலமைப்பு நிச்சயமாக கொண்டுவரப்படும்: அமைச்சர்…

Sep 17, 2026

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் பயணிகள் நலன் கருதி ரயில்…

Sep 17, 2026

சட்டம் அனைவருக்கும் சமமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்:…

Sep 17, 2026

அரசியல் நோக்கங்களுக்காகவே தொழற்சங்க போராட்டம்: பிரதி…

Sep 17, 2026

2029 ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டி;…

Sep 17, 2026

போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளில்…

Sep 17, 2026

மட்டக்குளி கொடூர விபத்து: கஞ்சா போதையில் காரை ஓட்டி 3 பேரின்…

Sep 17, 2026

தெமட்டகொடை களுபாலம அருகில் துப்பாக்கிச் சூடு – முச்சக்கர…

Sep 17, 2026
Prev Next 1 of 192
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.