• Monday, March 30, 2026

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி கண்டெடுப்பு

By Admin Last updated Sep 1, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ள பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மீட்கப்பட்டுள்ளது.

காணியில் நிலத்தில் எரிபொருள் நிரப்பிய தாங்கி இருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவின் நீதிமன்ற அனுமதியுடன் தோண்டும் நடவடிக்கை நேற்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Catchup shows

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் கிராம சேவையாளர், பொலிஸார், இராணுவத்தினர் முன்னிலையில் குறித்த பகுதி கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ளது.இதன்போது பாரிய இருப்பு எரிபொருள் தாங்கி ஒன்று எரிபொருட்கள் இல்லாத நிலையில் மீட்கப்பட்டுள்ளது.குறித்த எரிபொருள் தாங்கி புதைக்கப்பட்டுள்ள இடத்தில் நிலத்தில் மூன்று இடங்களில் தோண்டப்பட்டு எரிபொருள் தாங்கியில் இரண்டு இடங்களில் வெட்டப்பட்டுள்ள நிலையில் காணப்பட்டுள்ளது. 16.3 அடிநீளமும், 7.9அடி விட்டமும் கொண்ட எரிபொருள் தாங்கி மீட்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தாங்கியில் வெட்டப்பட்ட இடத்தில் மணந்து பார்த்தபோது மண்ணெண்ணைய் மணம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் மீட்கப்பட்ட எரிபொருள் தாங்கியினை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று பாதுகாக்குமாறும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதி பணித்துள்ளார்.

Prev Post

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில்இலங்கையை பாரப்படுத்த வேண்டி தமிழ்த் தரப்புகள் ஒன்றாகக் கடிதம்

Next Post

ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர்…

Mar 30, 2026

மணல் மாபியா உருவாகின்றது என்றால் அதைக் கட்டுப்படுத்துவது…

Mar 30, 2026

வறண்ட வானிலையினால் ஏற்படும் காட்டுத்தீ அபாயங்கள் குறித்து…

Mar 30, 2026

கப்பலில் இறக்கப்படும் விலைக்கு எரிபொருள் தருவதாகக்…

Mar 30, 2026

மக்கள் சேவகனாக இருந்த அநுர குமார இன்று எங்கே? –…

Mar 30, 2026

“குற்றவாளிகளை நாடுகடத்துதல், பாதுகாப்பு ஏற்பாடுகள்…

Mar 30, 2026

அன்று பாதுகாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு இன்று ஆபத்தில்!

Mar 30, 2026

ஓமானில் கைதான பாதாள உலகக் கும்பல் தலைவன் ‘மிதிகம…

Mar 30, 2026

​’Battle of the Legends’ கிரிக்கெட்: 216…

Mar 29, 2026

ஹட்டனில் மாணவனை தாக்கிய மூன்று மாணவர்கள் கைது.

Mar 29, 2026
Prev Next 1 of 96
Facebook
© 2026 - Meiveli. All Rights Reserved.