பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நஷ்டஈடு-கடற்றொழில் அமைச்சு.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மேலும் 9 ஆயிரத்து 110 இலட்சம் ரூபாய் நட்ட ஈடாக வழங்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

கப்பலின் காப்புறுதி நிறுவனத்தால் இந்த பணம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய கம்பஹா, கொழும்பு மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 15 ஆயிரத்து 32 மீனவர்களுக்கு இந்தப் பணம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக கடற்றொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் இடைக்கால நட்டஈடாக மீனவர்களுக்கு காப்புறுதி நிறுவனம் வழங்கிய மூவாயிரத்து 480 இலட்சம் ரூபாவும், மூவாயிரத்து 350 இலட்சம் ரூபாவும் பகிர்ந்தளிக்கப்பட்டது.

அதாவது மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பிரதேச செயலக அலுவலகங்கள் ஊடாக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குப் பின்னர், மீனவர்களின் உபகரணங்கள் மற்றும் கப்பல்களின் பாதுகாப்பிற்காகவும், பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து மீன்களைப் பிடித்து உட்கொள்வதால் ஏற்படக்கூடிய விளைவுகளைத் தடுக்கவும் நீர்கொழும்பிலிருந்து பாணந்துறை வரையிலான பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.