பொக்கை வாய் சிரிப்பால் பரிசை வென்ற பாட்டி.

 

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை கையில் வைத்துக் கொண்டு பொக்கை வாய் சிரிப்புடன் இருந்த படம் மூலம் பிரபலமானவர், நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி.

இந்தப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிரிப்பு என கருத்து தெரிவித்து இருந்தார்.   நாகர்கோவிலுக்கு வந்திருந்த முதலமைச்சர்  வேலம்மாள் பாட்டியையும் நேரில் சந்தித்தார்.

அப்போது தனக்கு இலவச வீடும், முதியோர் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என வேலம்மாள் பாட்டி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணித்தார். அதன்பிரகாரம்,  முதலில் முதியோர் ஓய்வூதியமும், பின்னர் இலவச வீடும் வழங்கப்பட்டது. அவற்றை பெற்றுக்கொண்ட வேலம்மாள் பாட்டி, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எனக்கு இலவச வீடு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. ஏழைகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முதலமைச்சரை பாராட்டுகிறேன் என்றார்.