மாற்றுத் திறனாளிகளை கையாள காவல்துறையினருக்கு பயிற்சி : தமிழ்நாடு அரசு உத்தரவு.

மாற்றுத் திறனாளிகள் மற்றும் மனநிலை சரியில்லாதவர்களை கையாளும் வகையில் காவல்துறையினருக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவல்துறையினர் பலத்தையும், அதிகாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நபர்களாகவும் தேவையற்றவர்களாகவும் பார்க்கப்படுவதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவராக கருதி நடத்தப்பட்டால் காவல்துறையின் மனித உரிமை மீறல்களின் எண்ணிக்கை குறையும் எனவும் குறிப்பிட்டுள்ளது.