சிறு மீனவர்களை இல்லாதொழிக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது, தொழிற்சங்கத் தலைவர் குற்றச்சாட்டு
மண்ணெண்ணெய் விலையை அதிகரித்தன் ஊடாக அரசாங்கம் சிறு மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை இல்லாமல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக மீனவ தொழிற்சங்கம் ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்டஅகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் தலைவர் அருண ரொசாந்த, சிறு மீன்பிடி தொழிலாளர்களுக்கு தொழில் செய்ய முடியாத அளவிற்கு மண்ணெண்யை பெற்று விலையை அரசாங்கம் அதிகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பேச்சுவார்த்தை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், நேற்று முதல் மண்ணெண்ணெயை தொடர்ச்சியாக பெற்றுத் தர நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துவிட்டு மண்ணெண்ணெய் விலையை அதிகரித்துள்ளனர். இது வரலாற்றில் என்றுமில்லாத அதிகரிப்பு. இவர்கள் என்ன செய்யப்போகின்றார்கள் எனத் தெரியவில்லை. கடந்த காலத்தில் சிறிய மீன்பிடி தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் யோசனையை அரசாங்கம் கடந்த காலத்தில் கொண்டுவந்தது.
புதிய படகுகள் தயாரிப்பை நிறுத்தினார்கள். 55 அடி நீளமான படகுகளை மாத்திரமே உருவாக்க முடியுமென அறிவித்தார்கள். 50 வீதம் அதற்கு நிவாரணம் வழங்குவதாக தெரிவித்தனர். எனினும் நாங்கள் அமைச்சருடன் கலந்துரையாடி அதில் வெற்றி கண்டோம். மீண்டும் படகு தயாரிப்பிற்கு அனுமதி கிடைத்தது. எனினும் தமாகவே அதனை நிறுத்துவதற்கு இன்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று எமது பிள்ளைகள் வீதியில் நிற்கின்றனர். பல நாட்களாக நாங்கள் வீதியில் நிற்கின்றோம். வீதிக்கு இறங்கி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது எனத் தெரிவிக்கின்றார்கள்.
அவ்வாறெனினும் இதற்கு தீர்வினைத் தருவது யார்? நாங்கள் கடனுக்கு எதனையும் கேட்கவில்லை. நிவாரணம் கோரவில்லை. அப்படி அரசாங்கம் ஏதாவது செய்திருக்குமானால் நாங்கள் அதனைவிட ஆயிரம் மடங்கு அரசாங்கத்திற்கு செய்திருக்கிறோம். ஆகவே மீனவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். எமது பிரச்சினைகளுக்கு தீர்வினை தராவிடின் நாம் தொழிலுக்குச் செல்லப்போவது இல்லை. என்றார்.
அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள் கடலானது செல்வந்தர்கள் மற்றும் பணபலம் படைத்த வர்த்தகர்கள் வசமாகும் நிலைமையை தோற்றுவித்துள்ளதாக அருண ரொசாந்த மேலும் தெரிவித்துள்ளார்.