விரைவில் இந்தியன் 2 -உதயநிதி ஸ்டாலின்.

கமல்ஹாசன் நடிப்பில், இந்தியன் 2 படம் மீண்டும் தொடங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இந்தியன் 2’. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தடைப்பட்டுக் கொண்டே இருந்தது. இறுதியாக லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் மோதல் உருவானது

தற்போது தெலுங்கில் ராம்சரண் இயக்கத்தில் உருவாகும் படத்தை இயக்கவுள்ளார் ஷங்கர். அவருக்கு எதிராக சென்னை மற்றும் ஹைதராபாத் நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்தது லைகா நிறுவனம். இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிற படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

இந்தப் பிரச்சினைகளால் மீண்டும் ‘இந்தியன் 2’ திரைப்படம் தொடங்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. விக்ரம் பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசும்போது இந்தியன் 2 நிச்சயம் எடுக்கப்படும் என்று கமல் கூறி வந்தார். ஆந்திராவில் பங்கேற்ற நிகழ்ச்சியில், ஷங்கர் தெலுங்கு படத்தை முடித்தபின் இந்தியன் 2 வேலைகள் ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று, டான் படத்தின் வெற்றி விழா நடந்தது. இதில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், “கடந்த சில தினங்களாக லைகா நிறுவனம் உடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறோம். விரைவில் இந்தியன் 2 பட வேலைகள் ஆரம்பிக்க போகிறோம்” என்று அறிவித்துள்ளார்.