ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் அரதொழில் வழங்கப்பட மாட்டாது: அரசாங்கம் தீர்மானம்.
அரச எதிர்ப்பு போராட்டங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரச சேவையில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிரகாரம் அரச சேவைகளை சீர்குலைக்கும் அல்லது அதற்கு சமமான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நபர்களின் விபரங்களை ஒரு தொகுப்பாக சேகரித்து பராமரித்து வர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவுகள் தரவு உள்ளீடு வடிவத்தில் பராமரிக்கப்படவுள்ளதுடன் அத்தகைய நபர்கள் அரசாங்க வேலைகளுக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்கள் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.