கொழும்பு -புகையிரத கழிவறையினுள் இருந்து குழந்தை ஒன்று மீட்பு.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இன்று(10) இரவு  பயணித்த புகையிரத கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை அநாதரவான நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.

புகையிரத நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.