24 மணிநேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் சனிக்கிழமை (4) பிற்பகல் 2 மணிமுதல், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (5) பிற்பகல் 2 மணிவரையான காலப்பகுதியினுள் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதியினுள், கொழும்பு 1,2,3,4,7,8,9,10 மற்றும் 11 வரையான பகுதிகளுக்கும், கடுவலை நகரம் அதனை அண்டிய பகுதிகளுக்கும் இவ்வாறு நீர்விநியோகம் தடைப்படவுள்ளது.

அத்துடன், கொலன்னாவை நகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களுக்கும், வெல்லப்பிட்டி, கொட்டிகாவத்தை பகுதிகளுக்கும் குறித்த காலப்பகுதியில் நீர்விநியோகம் தடைப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

மாளிகாகந்த நீரேந்து நிலையத்தக்கு நீரை விநியோகிக்கும் குழாய் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேலைகளால் இவ்வாறு நீர்விநியோகம் இடைநிறுத்தப்படுவதாகவும், முடிந்த வரை தேவையான நீரை சேமித்து வைக்குமாறும் குறித்த சபை கோரியுள்ளது.