நகைச்சுவை நடிகர் மயில்சாமி காலமானார்.
பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 57.
1984இல் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த மயில்சாமி இதுவரை 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அதில் கமலின் அபூர்வ சகோதரர்கள் ரஜினிகாந்தின் பணக்காரன் கில்லி,தூள் உள்ளிட்ட பல படங்கள் அவரது திரை வாழ்க்கையில் முக்கிய படங்களாக அமைந்தன.
விவேக் வடிவேலு உள்ளிட்டவர்களுடன் நடித்த மயில்சாமி ரசிகர்களை தனது அற்புதமான நகைச்சுவை திறமையால் கவர்ந்தார்.கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் நடிகர் மயில்சாமி சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
இவரது இறப்பு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.