சீனாவில் ஒரு நாளைக்கு 9 ஆயிரம் பேர் வரையில் மரணிக்கலாம்:கொரோனா தொற்று நிபுணர்கள் கணிப்பு.

கொரோனா தொற்று காரணமாக சீனாவில் ஒரு நாளைக்கு 9 ஆயிரம் பேர் வரையில் மரணிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனையடுத்து கொவிட் பரவலை கண்காணிக்க சர்வதேச விமானங்களில் இருந்து எடுக்கப்பட்ட கழிவு நீர்களை பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.

புதிய பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதை விட கழிவுநீரை சோதிக்கும் நடவடிக்கை வைரஸைக் கண்காணிப்பதற்கும், அமெரிக்காவில் நுழைவதை மெதுவாக்குவதற்கும் சிறந்த தீர்வை வழங்கும் என தொற்றுநோய் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில், டிசம்பர் ஒன்றில் இருந்து ஒட்டுமொத்த இறப்புகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டக்கூடும் எனவும், நோய்த்தொற்றுக்கள் மொத்தமாக 18.6 மில்லியனாக இருக்கும்  ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாத்தில் ஒரு நாளைக்கு 3.7 மில்லியன் பாதிப்புக்களுடன் உச்சத்தைத் தொடும் எனவும் ஆய்வுஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.