2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு இன்று.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்துக்கு முன்வைத்தார்.
அதன் பிரகாரம் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் கடந்த மாதம் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரையிலான 7 நாட்கள் இடம்பெற்றன.
செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 பேரும் எதிராக 84 பேரும் வாக்களித்தனர்.
இந்நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தில் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதம் கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகிய நிலையில் இன்று வியாழகிழைமை (டிச. 08) மாலை 5 மணியுடன் நிறைவடைந்ததுடன் வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான (இறுதி) வாக்கெடுப்பு இடம்பெற இருக்கின்றது.