நான் யார் என்று தெரியுமா?, நான் யாருக்கும் பயமில்லை,போக்குவரத்து போலீசாரை மிரட்டும் நபர்

போக்குவரத்து விதிகளை மீறி ஹைலெவல் வீதியூடாக காரொன்றை செலுத்தி சென்ற நபர் ஒருவர், அவரை இடைநடுவே தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர்களின் பணிக்கு இடையூறு விளைவிப்பது போன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவிடம் நாம் வினவியபோது, சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

போக்குவரத்து விதிகளை மீறி மஹரகம ஹைலெவல் வீதியில் காரொன்று பயணித்ததால், தெல்கந்த சந்தியில் வைத்து இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த காரை நிறுத்தியுள்ளனர்.

பின்னர் காரில் வந்த குறித்த நபர் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் கடமைக்கு இடையூறு விளைவித்ததோடு, அவர்களை நோக்கி நான் யார் என்று தெரியுமா?, நான் யாருக்கும் பயமில்லை, எப்படியும் என்னுடைய சாரதி அனுமதிப்பத்திரம் என் வீட்டிற்கே வந்து சேரும் என கடுமையான வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு மிரட்டியுள்ளமை குறித்த காணொளியில் பதிவாகியுள்ளது.