தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

2006ம் ஆண்டு அன்று சுகவீனம் காரணமாக சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16ம் ஆண்டு நினைவு எழுச்சி வணக்க தினம் உலகின் பல பாகங்களிலும் நினைவு நிகழ்வாக நடைபெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விடுதலை என்ற மாபெரும் குடும்பத்தின் மூத்த தலைமகனாக, பிதாமகனாக மூன்று தசாப்தங்களாக விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்து வழிநடத்தியவர் .பிரான்சில் பொண்டியில் இம்மாதம் 18ம் திகதி தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களினதும், 02.11.2007 அன்று சிறிலங்கா வான்படையின் குண்டுவீச்சுத் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட 7 மாவீரர்களின் 15 ம் ஆண்டும் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வாக நடைபெற இருக்கின்றது.

இதேவேளை சுவிற்சலாந்தில் இம்மதம் 17ம் திகதி சனிக்கிழமை எப்பிக்கோன் என்னும் இடத்தில் நினைவுகள் சுமந்த எழுச்சி வணக்க நிகழ்வுகள் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லண்டன் ஹெயிசில்  இம்மாதம் 18ம் திகதி தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின்  16ம் ஆண்டு வீரவணக்க நிகழ்வையொட்டி வீரவணக்க நிகழ்வும் அரசியல் அமர்வும் தமிழீழ அரசியல் துறை பிரித்தானிய கிளையினரால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புக்கள் ஒன்றிணையும் அரசியல் அமர்வாகவும் இந்த நிகழ்வு அமைய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.