கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் தோல்வி.
மருதானை சுற்றுவட்டப் பகுதியில் ஆரத்பமான அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் அமைச்சர் பைஸர் முஸ்தபா உள்ளிட்டவர்களோடு பொது மக்களும் பெரும்பாலானோர் இணைந்தததாக தெரிவிக்கப்ட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் காலி முகத்திடல் போராட்டக் குழுவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இன்றைய போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முன்னிலை சோசலிச கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட சுமார் 20 கட்சிகளும் 150க்கும் அதிகமான சிவில் சமுக அமைப்புகளும் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை சென்றடையும் என அறிவிக்கப்பட்ட போதும் கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாகவோ அல்லது அருகாமையிலோ இன்று போராட்டம் நடத்த அனுமதிக்கப்படமாட்டாது என பொலிஸார் அறிவித்தல் விடுத்திருந்தனர். மருதானையில் ஆரம்பித்து டெக்னிக்கல் சந்தியின் ஊடாக புறக்கோட்டையை நோக்கி சென்றுக்கொண்டிருந்த போராட்டத்தில், புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்திருந்தர்.இதனால் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பலர் கலைந்து சென்றுள்ளனர்.
ஆரம்பிக்கப்பட்ட போது இருந்த கூட்டம் இடைநடுவில் பாதியாக குறைந்துள்ளது. புறக்கோட்டை வீதியை பொலிஸார் வழிமறித்த போது பொலிஸாருடன் விசேட அதிரடிப்படையினரும் கலகமடக்கும் பொலிஸாரும், ஆயுதமேந்திய இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.