நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி.
நடிகர் தர்ஷன் தர்மராஜின் பூதவுடலுக்கு கொழும்பில் ஜனாதிபதி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
கொழும்பு தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடலுக்கு ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல்வாதிகள், திரை உலகினர் உள்ளிட்ட மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது சொந்த ஊரான இறக்குவானைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இன்றும் (4) நாளை (05) மாலை 3 மணி வரை மக்கள் அஞ்சலிக்காக, அன்னாரது பூதவுடல் இறக்குவானையில் உள்ள வீட்டில் வைக்கப்படும்.
அதனை தொடர்ந்து தர்ஷன் தர்மராஜின் பூதவுடல் நாளை 5 ஆம் திகதி மாலை 5 மணிக்கு இறக்குவானை பொது விளையாட்டு மைதானத்தில் தகனம் செய்யப்படும்.