மெய்வெளி நாடகப் பயிலகத்தின் மாதாந்த பயிற்சியாளர் அளிக்கை நேற்று நடைபெற்றது.

கொவிட் கால முடக்க நிலையின் பின்னர் மீண்டும் புத்தெழுச்சியுடன் ஆரம்பமாகிய மெய்வெளி நாடகப் பயிலகம் HAYES பிராந்தியத்துக்கான தனது பயிலரங்க மாணவர்களின்  மாதாந்த அளிக்கையை நேற்றைய தினம் பெற்றோருக்கான நிகழ்வாக நிகழ்த்தியிருந்தது.

அரங்கப் பயிற்சிகளூடாக சிறுவர்களின் ஆளுமை விருத்திக்கும், மொழிவளத் தேர்ச்சிக்கும், சுய சிந்தனை மற்றும் கலை வெளிப்பாட்டுக்கும் பயிற்சி அளித்து தளம் கொடுக்கும் மெய்வெளி நாடகப் பயிலகத்தில் தமது சிறுவர்களை இணைத்துக்கொள்வதற்கு லண்டனில் உள்ள பல பெற்றோரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பல பிராந்தியங்களில் வாழும் சிறுவர்களும் பயன்பெறும் வகையில் மெய்வெளி நாடகப் பயிலகம் Hayes, New Malden, Highwycombe, Harrow, Southend on sea போன்ற இடங்களில் தமது பிராந்தியப் பயிற்சி நிலையங்களை ஆரம்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.