தையிட்டி திஸ்ஸ விகாரையின் சட்டவிரோதக் கட்டுமானங்களை  இடித்து அகற்ற நடவடிக்கை – வலிகாமம் வடக்கு தவிசாளர் அறிவிப்பு!

Meiveli Media Team


யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்தில் அனுமதியின்றி முன்னெடுக்கப்படும் கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு வலிகாமம் வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அறிவித்தல் விடுத்துள்ளார். குறித்த கட்டுமானங்கள் அகற்றப்படாவிட்டால், பிரதேச சபையினால் அவை இடித்து அகற்றப்படும் என்றும், இதுதொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்பட்டு திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையில், விகாரை வளாகத்தில் மேலும் சில கட்டுமானப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விவகாரம் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. எனினும், கட்டுமானப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த கட்டுமானங்களை உடனடியாக அகற்றுமாறு விகாரை நிர்வாகத்துக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ள தவிசாளர் சுகிர்தன், அவை அகற்றப்படாவிட்டால் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">