நீதிமன்ற உத்தரவை ஊடகங்கள் தவறாகவே அறிக்கையிட்டுள்ளன – மைத்திரி குணரத்ன விஹாரமஹாதேவி பூங்காவில் கருத்து!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

இன்று காலை கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவிலுள்ள புத்தர் சிலைக்கு அருகில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மைத்திரி குணரத்ன, நீதிமன்ற உத்தரவு தொடர்பான சட்டப் பின்னணி குறித்து விளக்கமளித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
“நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ஊடகங்கள் தவறான முறையிலேயே அறிக்கையிட்டுள்ளன.
அத்துடன், பொலிஸாருக்கு நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருப்பின், அவர்கள் ஏன் அதனைச் நடைமுறைப்படுத்தவோ அல்லது அகற்றுவதற்கோ நடவடிக்கை எடுக்கவில்லை?” எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும், குறித்த நீதிமன்ற உத்தரவின் உத்தியோகபூர்வ பிரதியை எதிர்வரும் திங்கட்கிழமையன்றே பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.