விஹாரமாதேவி பூங்காவில் நடப்பது மொட்டுக் கட்சியின் அரசியல் திட்டமே – தொழிலாளர் மக்கள் முன்னணி தலைவர் குற்றச்சாட்டு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

கொழும்பு விஹாரமாதேவி பூங்காவில் இடம்பெறும் நடவடிக்கைகள் எவையும் பௌத்த தர்மத்திற்கோ அல்லது சாசனத்திற்கோ தொடர்புடையவை அல்லவென்றும், அது முழுமையான ராஜபக்ச வம்சத்தின் மொட்டுக் கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் அரசியல் நிகழ்வு மட்டுமே எனவும் தொழிலாளர் மக்கள் முன்னணி தலைவர் சமிந்த பெரேரா இன்றைய தினம் கொழும்பில் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் எந்தவிதமான பௌத்த ஆன்மீகப் பண்போ அல்லது புத்த சாசனமோ இல்லை என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவர் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், பொதுமக்கள் இதனைச் சிறிதும் மதிக்காமல் ஒரு காசுக்குக் கூட பொருட்படுத்தாமல் ஒதுக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இதுவொரு தூய அரசியல் நிகழ்வு என்பதால், இதனை வெறும் மத நிகழ்வாகக் கருதாது, அரசாங்கம் இதற்குரிய அரசியல் ரீதியான முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், இதனைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்ற இடமளிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.