அட்லாண்டிக் பெருங்கடலுக்குப் பெயர் மாற்றக் கோரிக்கை – ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்தாரா சுந்தர் பிச்சை?
Meiveli Media Team

அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரை ‘ட்ரம்ப் பெருங்கடல்’ என மாற்றுமாறு தாம் முன்வைத்த கோரிக்கையை கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நிராகரித்ததாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் பல்வேறு போர்களை நிறுத்துவதற்கு தாம் பங்களித்துள்ளதாகக் கூறிவரும் ட்ரம்ப், தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மோதல்களைத் தாம் முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், இதுவரையில் எட்டு போர்களை நிறுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், அட்லாண்டிக் பெருங்கடலின் பெயரைத் தனது பெயரில் மாற்றுவதற்காக கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்ததாகவும்,அதனை சுந்தர் பிச்சை ஏற்கவில்லை என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

