அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி அதிருப்தி.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடரில் இலங்கை சார்பில் கலந்து கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிவிவகார அமைச்சர், பேரவையின் கூட்டத் தொடரில் ஆற்றிய உரையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.அத்துடன் ஒட்டு மொத்தமாக அமைச்சர் அலி சப்ரியின் செயற்பாடுகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அலி சப்ரியை தொடர்ந்தும் வெளிவிவகார அமைச்சர் பதவியில் வைத்திருப்பதா இல்லையா என்பது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிடும் என இதன்போது பேசப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது அலி சப்ரிக்கு வேறு ஒரு அமைச்சு பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.