• Friday, December 5, 2025

Meiveli Meiveli - Media

  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • சினிமா
    • விளையாட்டு
  • கவிதைகள்
  • கட்டுரைகள்
  • ஆரோக்கியம்
  • ஆய்வுகள்
  • சிறுவர் களம்
    • சிறுவர் கதைகள்
    • சிறுவர் கவிதைகள்
    • சிறுவர் காணொளிகள்
  • காணொளிகள்
  • நேரலை
Meiveli

பண்டோரா ஆவணங்கள் வெளியானமை, இலங்கையில் என்ன நடந்தது?

By Admin On Sep 20, 2022
Share FacebookTwitterWhatsAppEmailLinkedin
VIDEO NEWS

பண்டோரா பேப்பர்ஸ் மூலம் வெளியாகியுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் அண்மைய நிலவரத்தை கேட்டு, வெளிப்படைத்தன்மைக்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

பண்டோரா ஆவணங்களில் வெளிப்படுத்தப்பட்ட சொத்துக்கள் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்டுள்ளதா என்பதை தீர்மானிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரத்தை கடிதம் மீண்டும் வலியுறுத்துவதாக டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா தெரிவித்துள்ளது.

“பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா, முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச, அவரது கணவர் மற்றும் முன்னாள் அரச அதிகாரி ஆர். பாஸ்கரலிங்கம் ஆகியோரின் சொத்துக்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் 2 முறைப்பாடுகளை அண்மையில் தாக்கல் செய்தது.”

குறித்த நபர்களின் சொத்துப் பிரகடனங்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைத்துப் பரிசோதித்திருந்தால் அது தொடர்பில் அறிவிக்குமாறு ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா சமீபத்திய கடிதத்தில் கோரியுள்ளது.

சொத்துக்கள் வேண்டுமென்றே குறிப்பிடப்படவில்லையா என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தத் தகவல் இன்றியமையாதது என டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா மேலும் கூறுகிறது.

ஆணைக்குழு தோல்வி

கடந்த வருடம், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உறவினர் மற்றும் அவரது கணவர் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகளை விசாரித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நிறைவேற்றவில்லை.

முன்னாள் ஜனாதிபதியும் பிரதமரின் உறவினருமான நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட சொத்துக்களை மிக ஆடம்பரமான வாழ்க்கை வாழ பயன்படுத்தியதாக உலகின் மிகப்பெரிய ஊடக விசாரணையின் பின்னர் இலங்கையர்கள் பண்டோரா பேப்பர்ஸில் வெளிப்படுத்தியுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டதோடு, ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஜனாதிபதியின் சட்டப் பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹணதீர 2021ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த அறிவித்தலுக்குப் பின்னர் திருக்குமார் நடேசன் இரண்டு முறையாவது ஆணைக்குழு முன் அழைக்கப்பட்டார்.

Catchup shows

ஜனாதிபதியின் உத்தரவுக்கு ஒரு மாதத்தின் பின்னர், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் டபிள்யூ.கே.டி.விஜேரத்ன நவம்பர் 8, 2021 அன்று அறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.

இது தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது. இறுதி அறிக்கைக்கான திகதியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளதாக குறிப்பிடப்படவில்லை.

“திருக்குமார் நடேசனின் வங்கிக் கணக்கு விபரங்கள் அடங்கிய அறிக்கைகள் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் வரவழைக்கப்பட்டு அறிக்கைகள் தற்போது கிடைத்து வருவதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்திருந்தார். விசாரணைகள் நிறைவடையாததால், அறிக்கைகள் மற்றும் ஏனைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு இறுதி அறிக்கை வழங்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 2021 ஆரம்பத்தில் விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் சுமார் ஒரு கோடியே 20 ஆயிரத்திற்கும் அதிக ஆவணங்களின் தரவுத்தளமானது வொஷிங்டனை தளமாகக் கொண்ட சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பால்  (International Consortium of Investigative Journalists) வெளியிடப்பட்டது.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசகராக இருந்த பிரித்தானிய குடியிருப்பாளர் இராமலிங்கம் பாஸ்கரலிங்கம், நவம்பர் 2021 தொடக்கத்தில் ICIJ ஆல் நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளானார்.

மாலபேயில் உள்ள HCBT எனப்படும் Horizon College of Business Technology தனியார் பல்கலைக்கழகத்தில் முதலீடு செய்வதற்கும் பிரிட்டனில் சொத்துக்களை வாங்குவதற்கும் அவர் பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் அவர் நிறுவிய அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்களில் பில்லியன் கணக்கான டொலர்களைப் பயன்படுத்தியதாக பண்டோரா ஆவணங்கள் வெளிப்படுத்தின.

பாஸ்கரலிங்கம் 2008 ஆம் ஆண்டு எந்த அரசாங்க பதவியையும் வகிக்காமல், “தனது சொந்த செல்வத்தைப் பயன்படுத்தி” கல்லூரியை நிறுவியதாக, HCBT தலைவர் உபுல் தரனாகம ICIJ இடம் தெரிவித்தார்.

ராமலிங்கம் பாஸ்கரலிங்கம் மீதான நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை என  ICIJ தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, டிங்கிரி பண்டா விஜேதுங்க மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆலோசகர் பதவிகளை வகித்த பாஸ்கரலிங்கம் தொடர்பில் பண்டோரா பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்வதாக தெரியவில்லை.

பண்டோரா வெளிப்பாடு

117 நாடுகளைச் சேர்ந்த 600ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் 90 அரச தலைவர்கள்,  உலகின் பணக்காரர்கள் மற்றும் அதிகாரப் படைத்தவர்கள் உட்பட 300ற்கும் மேற்பட்டவர்களின் நிதி பரிவர்த்தனைகளை ஆய்வு செய்துள்ளனர். நிருபமா ராஜபக்சவும் அவரது கணவர் திருக்குமார் நடேசனும் போலி நிறுவனம் ஒன்றின் மூலம் குவிக்கப்பட்ட செல்வத்தை மிகவும் ஆடம்பரமான வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

Prev Post

தேசிய பேரவை யோசனை மீதான விவாதம் இன்று.

Next Post

ரணில் ராஜபக்ச அரசாங்கம் கல்வி தொடர்பில் இதுவரையில் இருந்து வந்த உரிமைகளை திட்டமிட்டு இல்லாது செய்கிறது

விளம்பரங்கள்
மரண அறிவித்தல்கள்

அதிகம் படித்தவை

வெள்ளம் குறையும் நிலைமையில் தொற்றுநோய்கள் குறித்து…

Dec 1, 2025

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்…

Dec 1, 2025

மன்னார் இலுப்பைக்கடவை மற்றும் செட்டிகுளம் பகுதிகளில்…

Dec 1, 2025

திருகோணமலையில் புத்தர் சிலையை அகற்றுதல்: ஊடக சந்திப்பு!

Nov 17, 2025

உள்ளூர் பெரிய வெங்காய விவசாயிகளின் பிரச்சினைகளைத்…

Nov 17, 2025

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் 21ஆம் திகதிப் பேரணி…

Nov 15, 2025

உலகளாவிய தொழில்முனைவோர் வாரம் 2025 பிரதமர் தலைமையில்…

Nov 14, 2025

இலங்கையின் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்த புதிய ரோபோ இயந்திரம்!

Nov 13, 2025

இரட்டை உலக சாதனை படைத்த சாமுத்ரிகா!

Nov 13, 2025

பருத்தித்துறை – சுப்பர்மடம் கடற்பகுதி ஊடாக கேரள கஞ்சா…

Nov 3, 2025
Prev Next 1 of 421
Facebook
© 2025 - Meiveli. All Rights Reserved.