சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவு அபிவிருத்திற்கான தேசிய ஆலோசனைக் குழு தனது செயல்பாடுகளைத் தொடங்குகின்றது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றிற்கு நிலையான தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் செயற்படும் தேசிய ஆலோசனைக் குழு தனது செயல்பாடுகளைத் தொடங்கி, அதன் முதல் அமர்வு அண்மையில் பாராளுமன்ற வளாகத்தில் நடத்தியது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் தொழில் மற்றும் தொழில் முனைவு மேம்பாட்டு பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இதன் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன.

தற்போதைய வணிகத் தேவைகள் மற்றும் சவால்களுக்கு ஏற்ப, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் அனைத்து அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவில் உள்ள மூத்த அரசு அதிகாரிகள் கொள்கை உருவாக்கம், அரசு நிர்வாக நடைமுறைகளுக்கான கொள்கை தீர்மானங்களை எடுப்பதில் பங்களிக்கின்றனர். நிதிக்கான அணுகதலை வலுப்படுத்துவதற்கும் அதற்கான சூழலை உருவாக்குவதற்கும் தேவையான பங்களிப்பைப் பெறுவதற்காக இலங்கை மத்திய வங்கியின் பிரதிநிதித்துவம் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வங்கித்துறையை ஒழுங்குபடுத்துவதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவு துறையை வலுப்படுத்த தேவையான பங்களிப்பைப் பெற எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் பற்றிய கொள்கைகள், மூலோபாயங்களை உருவாக்கும்போது அவர்களும் பங்களிக்க முடியும் என்ற வகையில், இந்த ஆலோசனைக் குழு சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு தகுந்த பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், நிதித்துறை நிபுணர்கள், வங்கியாளர்கள் மற்றும் கல்வித்துறையின் வணிகம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவு கொண்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் பலரும் இந்தக் குழுவிற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவு மேம்பாட்டிற்கு பங்களிக்கும் அனைத்து தரப்பினரின் பங்களிப்பையும் இந்த தேசிய பணிக்காகப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகப் பிரச்சனைகளைப்
புரிந்து கொண்டு அவற்றுக்கு நடைமுறையில் தலையிட்டு பிரச்சனைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கண்டறிய எதிர்பார்க்கப்படுகிறது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவுகளின் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான உத்திகளை உருவாக்குவதற்கான தேசிய அளவிலான அறிவுசார் குழுவாக செயல்படுவதே இந்தக் குழுவை நிறுவுவதன் முக்கிய நோக்கமாகும். இதற்கு மேலதிகமாக, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவு மேம்பாட்டுடன் தொடர்புடைய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை உறுதிப்படுத்தி, கொள்கை உருவாக்கத்திற்கான உத்திசார் வழிகாட்டுதலையும் இது வழங்குகிறது.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவுகளுக்கான தேசிய ஆலோசனைக் குழுவின் பங்கு பின்வருமாறு விவரிக்கப்படலாம் –
அரசாங்கத்தின் வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுக்கும் தற்போதைய வளர்ச்சிப் போக்குகளுக்கும் ஏற்ப சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவுகளுக்கான தேசியக்கொள்கைச் சட்டகத்தை மதிப்பாய்வு செய்தல் மற்றும் புதுப்பித்தல்.
அமைச்சுகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்புக் குழு மூலம் சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவு தேசியத் திட்டத்தைத் திருத்துதல், புதுப்பித்தல் மற்றும் கண்காணித்தல்
வலுவான சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவு நிதியியல் கட்டமைப்பை நிறுவுதல்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவுகளுக்கு நிதி வசதிகளைப் பெறும்போது
ஏற்படும் ஆபத்தை மதிப்பிடும் முறையை நிறுவுதல்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவு ஆதரவு சூழலை உருவாக்குதல், தொழில் நுட்ப பரிமாற்றத்தை எளிதாக்குதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல், சந்தை அணுகலை மேம்படுத்துதல், நிறுவன திறனை வலுப்படுத்துதல் உள்ளிட்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவுவோர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைத் தீர்த்தல்.
சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் எதிர்கொள்ளும் முக்கிய நிதிச் சவால்களைத் தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்குதல்.

