ஊடகப்பிரிவில் 40 நியமனங்கள் எதற்கு? :ஜனாதிபதி ரணிலிடம் அநுர குமார கேள்வி
கடமைகளை சரியாக செய்ய முடியாவிடின் வீடு செல்லுமாறு அரச உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒன்றரை மாதங்கள் என்ற குறுகிய காலத்திற்குள் தன்னுடைய ஊடகப் பிரிவில் 40ற்கும் மேற்பட்ட புதிய நியமனங்களை வழங்கியுள்ளதாக இலங்கை நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க, இலங்கை ஜனாதிபதியின் ஊடகப் பிரிவில் பணியாற்றும் பலருக்கு 80 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட சம்பளம், எரிபொருளுடனான வாகனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் என்னவென கேள்வி எழுப்பியுள்ளார்.
அரச சேவையாளர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமெனத் தெரிவிக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தான் அரச சேவையாளர்களால் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர் என்பதை மறந்துவிடகக் கூடாது என அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.