ஈழத் தமிழர் அரசியல்

இ.திலகரட்ணம்

2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெற இருக்கின்ற, ஒன்பதாவது ஐனாதிபதி தேர்தல் களத்தில் இறங்கி இருக்கும் 39 வேட்பாளர்களுடன் இலங்கை தமிழரசு கட்சி, 1947ஆம் ஆண்டு முன்வைத்து சமஸ்டி இலக்கை நோக்கி, சுமந்திரன் சிவஞானம் அணி சஜித்தையும், சிறிதரன் அணி தமிழ் மக்கள் பொது வேட்பாளராக அரிய நேத்திரனையும், தமிழ் காங்கிரஸ் கஜேந்திரன் தேர்தலைப் புறக்கணிக்கவும் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், அங்கஜனும் டக்ளஸ் மீண்டும் தனது அரசியலை பாதுகாக்கும் நோக்கில், கோதாவை விட்டு றணிலுடன் கைகோர்ப்பதும், தேசிய மக்கள் கட்சி அநுரவோ அல்லது நாமல் ராஜபக்ஷ வோ ஈழ தமிழர் வாழ்வில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவரப் போவதில்லை என்பதை தமிழ் தலைமைகள் அறிந்திருந்தும் அதைப் புறந்தள்ளி , தேர்தல் களமாடா முற்படுகின்றனர்.

ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில், நடந்துமுடிந்த தேர்தல் உடன்பாடுகள், வாக்குறிதிகள் ,துரோக நிகழ்வுகளை மறந்து புதிய சாயம் பூசி, புதியதாகக் சித்தரித்து, தங்கள் நலன்களை பாதுகாத்துக் கொள்ள முற்படும் தமிழ் அரசியல் தலைமைகள் ஈழதமிழருக்காக மரணித்த மாவீரர்களுக்கு கணக்கு சொல்லத்தான் வேண்டும்.

1948ஆம் ஆண்டு, இலங்கை பிரித்தானியரிடம் இருந்து சுதந்திரம் பெற்ற போது, இலங்கையரின் போராட்ட அச்சுறுத்தல்களுக்காக, சுதந்திரம் வழங்கப்படவில்லை. இந்திய சுதந்திர போராட்டமும், அவர்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரமும், பிரித்தானியரின் குடியேற்ற நாடுகள் பற்றிய கருத்துநிலை மாற்றமுமே காரணமாயிற்று.
இந்த நிலையில் சோல்பரி கொமிஸன் முன் இலங்கை தமிழ் காங்கிரஸ் ஐம்பதுக்கு ஐம்பது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி சமஸ்டி என்ற கோரிக்கைகளை முன்வைக்கும் போதே அவர்களுக்கு தெரியும் இக் கோரிக்கைகள் பலவீனமானது என்று. காரணம் 1948 ஆம் ஆண்டு

குடிசனமதிப்பின் படி. சிங்களவர் – – – 74.9 %. இலங்கைத் தமிழர் – 11.2 %. முஸ்லிம்கள் – – – 9.2 %. இந்திய தமிழர் – – 4.2 %. பறங்கியர் – – – .5 %

இந்த விகிதாசார நிலையில், தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் 24.6% வீதத்தவராக இருந்த போதிலும்,இவர்கள் இலங்கையின் மலை நாட்டுப் பகுதியிலும், கொழும்பு, நீர்கொழும்பு , புத்தளம், சிலாபம் போன்ற இலங்கையின் வடக்கு, கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களிலும் பரந்து வாழ்கின்றார்கள் என்று தெரிந்திருந்ததினால் இலங்கை முழுவதையும் தாயகமாக ஏற்று இக் கோரிக்கையை முன்வைத்தனர். உண்மையில் 76% சதவீத சிங்கள மக்களை இக் கோரிக்கைகள் அச்சுறுத்தும் என்பதை தெரிந்திருக்க முடியாதா? ஆயினும் அன்றைய நிலையில் தமிழ் அரசியல் தலைமைகள் கொழும்பை வாழ்விடமாக கொண்டிருந்ததுடன், பெரிய வாழ்வாதாரங்களை தென் பகுதிகளில் கொண்டிருந்ததினால் அவர்களுக்கு தாயகம் என்ற நிலைப்பாடு இலங்கை முழுவதையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டிய அவசியமும் இருந்தது, இதனால் இலங்கை அரசியல் யாப்பில் உள்ளடங்கிய வகையில் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர் ஆனால் இக் கோரிக்கைகள் ஏமாற்று என்பது அவர்களுக்கு தெரியாதது அல்ல. இங்கு தமிழரசுக் கட்சி ஒருபடி முன்னேறி சமஸ்டி என்ற சொல்லுக்கான தமிழ்படுத்தலை தமிழரசு என்று குறித்திருப்பது. ஆச்சரியமானது.

இவர்கள் உள்அரசியலை அறிந்த முதலாவது பிரதமமந்திரி D. S .சேன நாயக்கா மந்திரி பதவி ஊடாக இவர்களைக் கையாண்டு ஒற்றைஆட்சி இலக்கை வென்றார். ஆனால் சிங்கள தலைமைகள் இந்த விடயத்தில் தமிழர் சார்ந்து ஆதீத முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறார்கள் என்பதைக் கூட இவர்கள் அறியவில்லையா? இதற்கு . ஜக்கிய தேசியக்கட்சி. சிறிலங்கா சுதந்திர கட்சி. லங்கா சமசமாஜக் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கட்சிகள் . எவரும் விலக்கல்ல.

1950 ஆண்டு கல் ஓயா திட்டத்தின் ஊடாக அம்பாறை தமிழர் பிரதேசங்கள் அச்சறுத்தலுக்கு உள்ளாகின .
1956 தனிச்சிங்கள சட்டம் தமிழ் மொழிக்கு அச்சுறுத்தல் ஆகிற்று. தொடர்ந்து ஏற்பட்ட இனக்கலவரம் தாயகம் பற்றிய அவசியத்தை உணர்தத்தியது சிறிமா சாத்திரி ஒப்பந்தம் இந்தியத் தமிழரை வெளியேற்றியதுடன் தமிழர் வாக்கு எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
மலைநாட்டு தன் தமிழரில் இருந்து அன்னியப் பட்டோம் விளைவு,

மலை நாட்டு தமிழர் தமக்கான அரசியலை தாமே முன்னேடுக்க வழி கோலியது. 1948 இல் தம்மைத் தமிழ் பேசுபவர்கள் என்றப் கருதும் நிலையில் இருந்த முஸ்லீம்கள் ,தமிழர் அரசியல் தலமையின் சுயநலத்தை விளங்கிக் கொண்ட நிலையில் சிறுபான்மையினர் என்ற அடையாளத்தைக் கையாள தேசிய கட்சிகளுடனும் சேர்ந்தனர். பின்னர் இஸ்லாம் மதத்தை முன்னிலைபடுத்தி முஸலீம் கட்சிகள் ஊடாக தமது அரசியல் பேரம்பேசல் பலத்தை பாதுகாக்கின்றனர்.

பலவீனப்பட்ட தமிழர் 1971 தரப்படுத்தலால் கல்வியில் தமக்கிடையே போட்டி போட்டனர். அரசாங்க வேலைவாய்ப்பை இழந்தனர் பிரதேச அபிவிருத்தியை இழந்தனர். 1976 ஆம் ஆண்டு ஈழநாட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாக்கப் பட்ட போதிலும் காங்கிரசும் தமிழரசுக் கட்சியும் தனித்த அரசியலைக் கைவிடவில்லை. 1983 இன் இனக்கலவரம் தமிழர் தாயகத்தை இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியாக காட்டிற்று, இந்திய தலையீடு 13 ஆம் திருத்தம் மாகாணசபை நிறைவேற்றப்பட்டது. தமிழர் அரசியல் கட்சிகள் தலைமைகள் நீண்ட பெருமூச்சுடன் முடித்துக் கொண்டனர்.

புதிய பாதை வீறு கொண்ட தமிழர். ஏதிராக விரோதிகள் 2009இல் முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தனர்.

15 years today - A massacre in Mullivaikkal | Tamil Guardian

2009 பின் பழைய குருடீ கதவைத் திறடீ
தமிழர் அரசியல் தலைமைகள் தலை தூக்கின களைகட்டியது கட்சிகள் 13 வது திருத்தச் சட்டத்தை விமர்சித்தனர். மாகாணசபை உரிய அதிகாரம் கொண்டிருக்கவில்லை என்று முதலமைச்சரும் சபைத் தவிசாளரும் முறையிட்டனர் . ஆனாலும் கட்சி அரசியல் செய்வதற்கு அவர்களுக்கு மாகாணசபை அவசியமாயிற்று.

இந்த நிலையில், இரு தேசம் ஒரு நாடு என்பதோ, அல்லது சமஸ்டி என்பதோ. அல்லது ஐனாதிபதி பொது வேட்பாளரோ என்பதோ பழைய கதை தான். அவர்களின கட்சிகளின் இருப்பை உறுதிப்படுத்த போதுமானது. அரசியல் தந்திரோபாயம் என சஜித் பக்கம் சாய்யும் சுமந்திரன் ஒரு மந்திரி பதவிக்கு தயார்படுத்தி விட்டார்.

2015இல் நல்லாட்சி என்ற கோசத்துடன் மைத்திரிபால சிறிசேனவை ஐனாதிபதி ஆக்க கைகோர்த்து தமிழர் தரப்பு அடையாத இலக்கையா? சஜித்துடன் கைகோர்த்து அடையலாம். சுமந்திரன் தரப்பு அடையலாம் என்று சொன்னால் கேட்பவருக்கு என்ன மதி.
இந்திய தலையிட்டால் திலீபன் கோரிக்கையை கூட கண்டுகொள்ள முடியாத இந்திய அரசியல், ஈழத் தமிழருக்கு அரசியல் உரிமை பிச்சை கொடுக்கும் என போராட்ட கட்சிகள் கோரினால் பூகோள அரசியல் விரடுமா?

டக்ளஸ், அங்கஜன், கருணா, பிள்ளையான் தமது ஆதரவை கோதாபயாவில் இருந்து றணில் பக்கம் என்றால். ஐனாதிபதி வேட்பாளர்கள் அநுரவுக்கும் நாமலுக்கும் தெரியும் இவர்களைப் பராளுமண்றத்தில் சேர்க்கலாம் என்று. ஆனால் இது தமிழர் எமக்கு தெரியாது புரியாது..
இராணுவதளபதி சரத்பொன்சேகரவை ஆதரிக்க தீர்மானித்த தநதிரோபாயத்திற்கு முன்னால் தமிழ் பொதுவேட்பாளர் எம்மாத்திரம். எல்லாம் தமது அரசியல் அதிகாரத்தை நிலைப்படுத்தும் தந்திரோபாயம் தான்.

உண்மையில் தமிழ் மக்கள் சார்ந்த அரசியல் என்றால் தனித்துவம் சுயநலம் முன்னிறுத்தப்படாது. உயிர் ஈகை வரை செல்லும் நேர்மையின் குறியீடு. 2001ஆம் ஆண்டு தேசியத் தலைவரின் முன்னேடுப்பில் உருவாக்கப்பட்ட தமிழர் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னரும் எல்லாக் கட்சிகளும் தமது அடையாழளங்களை காப்பாற்றி கொண்டனர் தமிழர் கூட்டமைப்பில் இனைந்த பின் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கும் செல்வம் அடைக்கலநாதன், சிவாஜிலிங்கம், சிறிகாந்தா , சித்தார்த்தன் தரும்மலிங்கம் தெரியாதா தமது கட்சி கலைக்கப்பட்டுத் தான் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட தென்று. ஆயினும் கட்சியை தொடர்ந்து வைத்திருப்பதன் பொருள் என்ன , விக்னேஸ்வரனுக்கும், அனந்தி சசிதரனுக்கும் தெரியாதா தாம் தனித்து கட்சி அமைத்து தமிழர் உரிமை மீட்க முடியாது என்பது.
கயேந்திரன் தேர்தலை புறக்கணிக்கச் சொல்னால் தெரியாதா வாக்களித்த மக்களின் 50 சதவிதம் ஜனாதிபதியை தெரிவு செய்ய போதுமானதுஎனறு. உண்மையில் தமது அரசியலை பாதுகாக்கவே இந்த நாடகங்கள்.

பாவம் மக்கள் உத்திரவாதத்திற்கும் பண உதவிக்கும் பதவிக்கும் கூட்டம் சேருகின்றனர்.
உண்மையில் மக்கள் நலன் நோக்கினால் கட்சிப் பதவிகளை தியாகம் செய்துவிட்டு ஒன்று சேருங்கள்.கலந்துரையாடுங்கள் பலத்தை நிறுவுங்கள்.

புற்றீசலாக தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து கொண்டிருக்கும் நிலையில்
இனப் பற்று ஈழதாய்மண் நாட்டுப் பற்று , மொழிப்பற்று நேர்மையான வாழ்வு, இலஞ்சம் கலப்படம்அற்ற கடுமையான உழைப்புடன் கூடிய வாழ்வு, .தங்கி வாழ்வை விலத்தி சுய பொருளாதாரத்தை தேடல் என ஒற்றுமையாய் இருங்கள் துணிவுடன் எதிர் கொள்ளலாம்.
அரசியல் ரீதியாக வலு வேறாக்கத்தை தலையீடு இல்லாத நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்துங்கள். சுதந்திரம் எமது பிறப்புரிமை பெறுவது அல்ல வாழ்வோம்.

இலங்கையில், ஜனநாயகம் 1989ஆம் ஆண்டு ஆறிமுகப் படுத்தப்பட்ட பிரதேச விகிதாசார பிரதிநிதித்துவ தேர்தல் முறையின் ஊடாக நிறுவப்படுகின்றது. இதனால் 1948 ஆம் ஆண்டு சோல்பெரி கமிஷனால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரதேச தனிநபர் பிரதிநிதித்துவத்திற்குப் பதிலாக பிரதேச கட்சி விகிதார பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது.

இத் திட்டத்தின் கீழ் தனி நபர் தேர்தலில் தனித்து வேட்பாளராக போட்டி போட முடியாது. குறித்த தேர்தல் பிரதேசத்தில் கட்சியின் வேட்பாளர் தொகுதியில் மட்டும் சேர்ந்து கொள்ளலாம். கட்சிதான் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகளை கட்சிதான் தெரிவு செய்யும். தெரிவு செய்யப்பட்ட தனிநபர் குறித்த இழிவும் தொகையான வாக்குகளைப் பெற்றிருந்தால் தெரிவு செய்யப்படலாம். தெரிவு செய்யப்பட்டவர் தொகுதியின் தனிப் பிரதிநிதி என உரிமை பராட்டமுடியாது. தவிர தனித்து அப் பிரதேசத்திற்கான பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை. தவிர தேசியப்பட்டியல் என்ற வகையில் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படுபவர்கள் வேட்பாளராக கூட இருக்க தேவையில்லை கட்சியின் தீர்மானத்திலேயே தெரிவு செய்யப்படுவர்.

தனிநபர் தனது தேர்தல் தொகுதியில் மட்டுமே வாக்களிக்க முடியும் ஆனால் கட்சியின் வேட்பாளராக எந்த தேர்தல் தொகுதியிலும் வேட்பாளராக நிற்க முடியும். தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதி கட்சியை விட்டு விலகினால் அவர் பிரதிநிதித்துவத்தை இழந்துவடுவார்.
இந்த தேர்தல் முறையில் கட்சிகள் ஜனநாயகத்தை காப்பாற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. கட்சி தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்திருந்தால் வேண்டும்.

தவிர கட்சியின் மொத்த அங்கத்தவர் தொகை எவ்வளவுவேட்பு மனு கொடுக்கப்பட்ட குறித்த தேர்தல் தொகுதியில் எவ்வளவு தொகை அங்கத்தவர் தேர்தலில் எந்த ஒரு வாக்கும் கிடைக்காவிடினும் விளைவு இல்லை

கட்சியின் பொதுக் கூட்டம் எவ்வாறு நடந்தது?
பொதுக் கூட்டத்திற்கான அங்கத்தவர் எவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றார்?
கட்சியின் பொதுச் சபை எவ்வாறு தேரிவு செய்யப்பட்டது.?
என்பன போன்ற கேள்விகளுக்கு போது மக்களுக்கு விளக்கம் இருக்கிறதா?

2022 ஆம் ஆண்டு சிங்கள மக்கள் இந்த தேர்தல் முறை விளைவுகளுக்கு எதிராக கலகம் செய்தனர். ஐனாதிபதியையே துரத்தினர் ஆனாலும் கட்சி அரசியல் யாப்பு அவர்களை காப்பாற்றியது திரும்பவும் பழைய முகங்கள் புதிய ஆடையில் பாராளுமண்றத்தை அலங்கரித்தன பாவம் மக்கள்.

இந்த ஜனநாயகத்தை தான் தமிழ் கட்சிகள் கையாளுகின்றன இதுவும் இவர்களுக்கு சாதகமானதே.
கட்சி கட்டி பல கருத்துக்களை கூறி மக்களை குழப்பும் எந்த ஒரு பிரதிநிதியாவது தான் இவ்வளவு வாக்குகள் பெற்றேன் என்றும் தான் இப் பிரதேசத்திற்கு பிரதிநிதி என்று பொறுப்பு ஏற்பதாக உறுதிபட கூறமுடியுமா?

கட்சியின் ஜனநாயததிற்கு உதாரனமாக 2020 நடந்த உள்ளுராட்சி மன்றதேர்தலில் யாழ் மாநகர சபைக்கு வெறி பெற்ற தமிழரகூட்டமைப்பு கூடிய வாக்கு பெற்ற பிரதிநிதியை தவிர்த்து குறைவான வாக்குப் பேற்றை வேறு ஒருவரை மாகாண சபை முதல்வர் ஆக்கியது வரை கட்சியின் ஆதிகாரம் இருக்கிறது.

இந்த அரசியல் தந்திரோபாய தந்தை பல ஆயிரக்கணக்கான மக்களைப் பலி கொடுத்த சமூகத்தின் அரசியல் ஆளுமைகள் பயன்படுத்தி மக்களை வஞ்சிப்பது ஏற்குமா உலகு.
முதலில் யாருக்கு ஜனநாயகம் என்பதை உறுதிப்படுத்துவோம்.