தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவதற்கே பொது வேட்பாளர் : சித்தார்த்தன் தெரிவிப்பு
தமிழ் மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம் என புளொட் அமைப்பின் தலைவரும் யாழ் மாவட்ட நடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றி்ன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆயுதப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்திருந்தாலும் கூட என்ன காரணத்திற்காக முதலில் சாத்வீகமாகவும் பின்பு ஆயுதப் போராட்டமாகவும் தமிழ் மக்களால் தொடங்கப்பட்டதோ அந்த காரணம் இன்றும் இம்மியளவும் மாறாது அப்படியே இருகிறது. மாறாமல் இருப்பதைக் காட்டிலும் இந்த நாட்டில் எம்மவர்களின் தொகை இன்னும் குறைந்து வருவதை பார்க்க கூடியதாகவுள்ளது’ என்று தெரிவித்தாா். சகல வழிகளிலும் தமிழ் மக்கள் மிகப் பெரிய பின்னடைவை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம், அரசியல், கல்வி, எண்ணிக்கை என அது நீண்டு செல்கிறது. அண்மைக் காலமாக இந்தியா, கனடா, அவுஸ்ரேலியா என பல நாடுகளுக்கு அதிகளவில் செல்கிறார்கள். 15 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் குடி புகுந்துள்ளார்கள். இந்த நிலை தொடர்ந்து கொண்டு இருக்கிறது’ என்று தெரிவித்த சித்தாா்த்தன், இந்த நிலை தமிழ் மக்களை பின்னடைவுக்கும், படுபாதாளத்திற்கும் கொண்டு செல்லும்’ என்றும் எச்சரித்தாா். தமிழ மக்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதை உலகிற்கு காட்டுவது தான் எங்களது விருப்பம். அது தான் பொது வேட்பாளர் விடயம். மக்களில் பலர் அதை விரும்புகிறார்கள். சிலர் விரும்பவில்லை. சிலர் இது ஒரு விசப் பரீடசையாக இருக்கும் என்கிறார்கள்’ என்று குறிப்பிட்ட புளொட் அமைப்பின் தலைவா், ‘நாம் விரும்பக் கூடிய வாக்குளை கொண்டிருக்காவிட்டால் அது பாதிக்கும் என நினைக்கிறார்கள். ஒற்றுமையை காட்ட வேண்டும்’ என்று தெரிவித்தாா்.இந்த விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் சேனாதிராஜா கூட அதன் முக்கியத்துவம் தொடர்பில் கூறியுள்ளார். புதிதாக தெரிவு செய்யப்படட தலைவர் சிறிதரன் கூட அது சரியென சொல்லியுள்ளார். இப்படியாக தமிழரசுக் கட்சியில் இருக்கக் கூடிய பலர் ஒத்துக் கொள்கிறார்கள்’ என்றும் புளொட் அமைப்பின் தலைவா் சித்தாா்த்தன் மேலும் தெரிவித்தாா்.